‘பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்’ அமித் ஷா பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
Edappadi Palanisamy On AIADMK BJP Alliance : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித் ஷா மீண்டும் கூறிய நிலையில், எடப்பாடி பழனிசாமி பதில் கொடுத்துள்ளார்.

சென்னை, ஜூலை 12 : 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டாக கூறியுள்ளார். தமிழகத்தல் கூட்டணி ஆட்சி (AIADMK BJP Alliance) அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) பேசிய நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) பதில் கொடுத்துள்ளார். தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அண்மையில் பாஜக அதிமுக கூட்டணி அமைத்தது. கூட்டணி அமைத்திருந்தால், அதில் சில பிரச்னைகள் எழுந்துள்ளது என்றே சொல்லலாம். அதாவது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா கூறி வருகிறார். ஆனால், இதுவரை தமிழக அரசியல் வரலாற்றிலேயே கூட்டணி ஆட்சி என்பது இல்லை.
தமிழகத்தில் இருக்கும் திமுக , அதிமுக என பிரதான கட்சிகைள மாறிமாறி ஆட்சியில் இருந்து வருகிறது. எனவே, தற்போது அமித் ஷா கூட்டணி ஆட்சி என கூறுவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இதற்கு அதிமுக தலைவர்கள் மறுத்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அதிமுக பாஜக கூட்டணி குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கூறினார்.
Also Read : அதிமுக வென்றால் கூட்டணி ஆட்சியா? ஒரே வார்த்தையில் திட்டவட்டமாக சொன்ன அமித் ஷா




‘பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்’
தொடர்ந்து, அவரிடம் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், அமைச்சரவையில் பாஜக அங்கம் வகிக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஆம் என அமித் ஷா பதில் அளித்துள்ளார். இவரது கருத்து அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
2025 ஜூலை 12ஆம் தேதியான இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, ”சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Also Read : ” 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1500 ரூபாய் தவற விட்டீர்களே” – எடப்பாடி பழனிசாமி பேச்சு..
இதற்கிடையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூட்டணி குறித்து பேசுகையில், “கூட்டணி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முடிவே இறுதியானது. அவர் சொல்வதே எங்களுக்கு வேதவாக்கு” என கூறியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் அதிமுக பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.