Nainar Nagendran: பாஜகவின் டம்மி வாய்ஸா எடப்பாடி பழனிசாமி..? முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!
AIADMK - BJP Alliance: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணி பேசுபொருளானது. திமுகவின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள அதிமுக, இக்கூட்டணி மக்கள் நலனுக்கானது என வாதிடுகிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை, ஜூலை 10: வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு (2026 Assembly Elections Tamil Nadu) இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. தேர்தலை சந்திக்கும் வகையில் அதிமுக எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இதனால், திமுக (DMK) உள்ளிட்ட பல கட்சிகளும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. சமீபத்தில் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami), மக்களுக்கு நல்லது செய்யும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தநிலையில், நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் பதிலடி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில், “டோல்கேட்களில் மட்டுமல்ல, டீசல் மற்றும் பெட்ரோல் போடுவதிலும் கோடிக்கணக்கான பணத்தை போக்குவரத்து கழகம் பாக்கியை வைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் அரசு போக்குவரத்து கழகத்திற்கு மானியத்தை கொடுத்து பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் ஒரு முதலமைச்சரின் வேலை. இது போன்ற பாக்கியால் போக்குவரத்து கழகங்கள் பெரியளவில் பாதிக்கப்படுகிறது.




ALSO READ: மதிமுகவில் மீண்டும் முற்றிய மோதல்.. வைகோ சொல்லும் முக்கிய விஷயங்கள்.. என்ன நடக்கிறது?
தமிழ்நாடு இங்கேதானே இருக்கிறது. எதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணம். 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி, அதிமுக – பாஜக கூட்டணி அமைத்த பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அதாவது, தோல்வி பயம் வந்துவிட்டது. வள்ளியூரில் ஒரு மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்டுள்ளார், அம்பாசமுத்திரத்தில் நேற்று அதாவது 2025 ஜூலை 9ம் தேதி போதைப்பொருள் பயன்படுத்தி நபர் ஒருவர், 17 வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். தமிழ்நாட்டில் தினசரி இதுபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இவற்றை எல்லாம் மறைப்பதற்காகவே, ஓரணியில் தமிழ்நாடு என்று சுமா ஒரு பேனரை வைத்துகொண்டு ஊர் ஊராக செல்கிறார்கள். இதனால், தமிழ்நாட்டிற்கு எந்த பயணும் இல்லை. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
மதுரை மாநாடு குறித்து நயினார் நாகேந்திரன்:
“Edappadi Palaniswami did not speak as the voice of the BJP, he only spoke what he had to say. I don’t know what has happened to Chief Minister M.K. Stalin now” – BJP state president Nainar Nagendran responded to Chief Minister M.K. Stalin’s criticism. pic.twitter.com/cm0wnh7cNr
— Ranipet Newsit (@Newsit_Ranipet) July 10, 2025
முதலமைச்சர் என்ன பேசுவது என்றே தெரியாமல் பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி பேச வேண்டிய கருத்தைதான் பேசி வருகிறார். பாஜகவின் டம்மி வாய்ஸாக எடப்பாடி பழனிசாமி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணியின் நாங்கள் இருக்கிறோம். வைகோ எப்போது அதிகமாக கோபம் கொள்ளும் நபர்தான். பத்திரிகையாளர் தாக்கப்பட்டது வேதனைக்குரியது மற்றும் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் தன் கண்டன குரலை எழுப்ப வேண்டும்.
ALSO READ: கோவை குண்டுவெடிப்பு.. 27 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது.. பின்னணி என்ன?
மதுரையில் கடந்த 2025 ஜூலை 22ம் தேதி நடைபெற்ற முருகன் மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதேநேரத்தில், திமுக மாநாடு நடத்தினால் டாஸ்மாக்கில்தான் கூட்டம் கூடும். முருகன் மாநாட்டில் கூட்டம் முடிந்ததும் இருக்கைகள் அழகாக அடுக்கப்பட்டு சென்றுவிட்டனர். அதன்படி, முருகன் மாநாட்டை உலகமே பாராட்டி வருகின்றனர்.” என்று தெரிவித்தார்.