‘என் பெயரை பயன்படுத்தக் கூடாது’ அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை.. உச்சகட்ட மோதல்!
PMK Ramadoss Anbumani Issue : பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, அன்புமணி தன்னுடைய பெயருக்கு பின்னால் தனது பெயரை பயன்படுத்தக் கூடாது என அதிரடியாக ராமதாஸ் அறிவித்துள்ளார். வேண்டுமென்றால், எனது இனிஷியலை போட்டுக் கொள்ளலாம் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை 10 : பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி (PMK Internal Issues) பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அன்புமணிக்கு ராமதாஸ் (Ramadoss vs Anbumani) எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, அன்புமணி தன்னுடைய பெயருக்கு பின்னால் தனது பெயரை பயன்படுத்தக் கூடாது என அதிரடியாக ராமதாஸ் அறிவித்துள்ளார். வேண்டுமென்றால், எனது இனிஷியலை போட்டுக் கொள்ளலாம் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தந்தை மகனுக்கு இடையேயான மோதல் முற்றியதாக தெரிகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காமராஜர் சாலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக மற்றும் வன்னியர் சங்க பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் இந்த கூட்டத்தில் ராமதாஸ் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
குறிப்பாக, அவர் பேசுகையில், “அன்புமணிக்கு பெயருக்கு பின்னால் என் பெயரை பயன்படுத்தக் கூடாது. தேவை என்றால், அன்புமணி எனது பெயரை இனிசியலாக பயன்படுத்திக் கொள்ளலாம். என் பேச்சை கேட்கவில்லை என்றால், என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது. ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக சிலர் கூறுகின்றனர். ஐந்து வயது குழந்தையான நான் தான் 3 ஆண்டுகளுக்கு முன்பு அன்புமணியை பாமக தலைவராக்கியவன். என் பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக் கூடாது” என அதிரடியாக ராமதாஸ் கூறினார்.
Also Read : பாமக தலைமைப் பதவிப் போர்: தேர்தல் ஆணையத்தில் முறையீடு..!
தந்தை மகன் மோதல்
பாமக நிறுவனராக ராமதாசுக்கும், அக்கட்சி தலைவருமான அன்புமணிக்கும் மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. கட்சிக்குள் தங்களது பலத்தை நிரூபிக்க ராமதாஸ் மற்றும் அன்புமணி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தங்களுக்கான ஆதரவாளர்களை திரட்டி, தனித்தனியாக கூட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், இருவரின் ஆதரவாளர்கள் நீக்கியும், கட்சியில் சேரத்து வருகின்றனர். இருவரும் மேடையேறி, ஒருவரைக்கொருவர் விமர்சித்து வருவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. என் கடைச மூச்சு இருக்கும் வரை தானே பாமகவின் தலைவர், நிறுவனர் என ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Also Read : அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட வில்லை.. உறுதியாக சொன்ன ஜி.கே.மணி..!
இதற்கிடையில், 2025 ஜூலை 5ஆம் தேதி பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமகவில் அனைத்து நிலையிலும் முடிவு எடுக்கும் அதிகாரம் ராமதாஸூக்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்டட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அன்புமணி நீக்கப்பட்டது குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதி இருக்கிறார். இப்படியாக, இருவருக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், தனது பெயரை பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.