Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அன்புமணி பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்… ராமதாஸ் காட்டம்

PMK politics: பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியைப் பற்றிய கேள்விகளை தவிர்க்க வேண்டும் என மனவேதனையுடன் தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 'Level Up' ஆங்கிலத் திட்டத்தை வரவேற்று, அதை விரிவுபடுத்த வேண்டும் என்றார். பட்டாசு விபத்து, போலீஸ் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களில் உரிய இழப்பீடு மற்றும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் வலியுறுத்தினார்.

அன்புமணி பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்… ராமதாஸ் காட்டம்
பாமக நிறுவனர் ராமதாஸ்Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 04 Jul 2025 06:43 AM

விழுப்புரம் ஜூலை 4: பட்டாளி மக்கள் கட்சி (Patali Makkal Katchi) நிறுவனர் ராமதாஸ் (Founder Ramadoss), அன்புமணியைப் (Anbumani) பற்றிய கேள்விகளை கேட்க வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ‘Level Up’ ஆங்கிலத் திட்டத்தை வரவேற்றும் அவர், அதை ஆரம்ப வகுப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றார். பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதால், அனுமதியில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார். விருதுநகரில் போராட்டம் நடத்திய சிஐடியு உறுப்பினர்களை எஸ்.பி. எச்சரித்தது கண்டனத்திற்குரியது என்றும் கூறினார். போலீசார் சுட்டு கொன்ற அஜித் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். பாமக-திமுக கூட்டணி பேச்சு நடக்கின்றது என்பது வதந்தி என்றும் அவர் மறுத்தார்.

அன்புமணி தொடர்பாக கேள்வி வேண்டாம் – ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி தொடர்பான கேள்விகளை ஏற்க மறுத்து கடுமையான எச்சரிக்கையுடன் பதிலளித்துள்ளார். “அந்த அளவுக்கு மன வேதனைப்பட்டுள்ளேன். எனவே, அன்புமணியைப் பற்றிய கேள்விகளை என்னிடம் கேட்கவேண்டாம்,” என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் வகையில் அரசு ‘Level Up’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது என்பது வரவேற்கத்தக்கது என்றார். மேலும், இந்த திட்டத்தை 1 முதல் 5ம் வகுப்பு வரை விரிவுபடுத்தவும் அவர் வலியுறுத்தினார்.

அஜித் குமாரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டுகோள்

அத்துடன், சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதைக் குறிப்பிடும் அவர், இனி பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி அளிக்கும்போது மிக கடுமையான விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என வலியுறுத்தினார். இச்சம்பவத்தில் இழப்பீடு கோரி போராடிய சிஐடியு தோழர்களை விருதுநகர் எஸ்.பி. எச்சரித்தது கண்டனத்திற்குரியது என்றும் கூறினார். திருப்புவனத்தில் போலீசார் சுட்டு கொன்ற அஜித் குமாரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், சம்பவத்திற்கு காரணமான போலீசாருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

எம்எல்ஏ அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை

பாமக எம்எல்ஏ அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்றும், நிறுவனர் மற்றும் தலைவராக இருக்கும் எனக்கு மட்டும்தான் அந்த அதிகாரம் உள்ளது என்றும் ராமதாஸ் தெளிவுபடுத்தினார். திமுக அல்லது அதிமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதெல்லாம் வெறும் வதந்தி என்றும் கூறினார்.

மகளிர் மேம்பாட்டுக்காக வன்னியர் சங்கத்தின் சார்பில் பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டில் அனைத்து கட்சிகளிலும் உள்ள மகளிர் கலந்துகொள்ளலாம் என்றும், பொதுமக்களை பாதிக்கும் வகையில் ரயில் கட்டணங்களை உயர்த்தக்கூடாது என்றார். இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கமாக கருத்து தெரிவித்தார்.