கோவை குண்டுவெடிப்பு.. 27 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது.. பின்னணி என்ன?
Coimbatore Blast Accused Arrest : 1998ஆம் ஆண்டு நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 28 ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்த நிலையில், 2025 ஜூலை 10ஆம் தேதியான இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.

கோவை, ஜூலை 10 : கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் (Coimbatore 1998 bomb blast case) 27 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 1998ஆம் ஆண்டில் இருந்து தலைமறைவாக இருந்த வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். 1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. 1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. தேர்தல் பரப்புரைக்காக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கோவைக்கு வந்திருந்தார். அப்போது, ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு சந்திப்பில் பேச இருந்த மேடைக்கு அருகே குண்டி வெடித்தது. அதைத் தொடர்ந்து, கோவையில் 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன. அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
கோவை குண்டுவெடிப்பு சம்பவம்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 58 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய கோவை மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, அல் உம்மா இயக்கம் பொறுப்பேற்று இருந்தது. இதனை அடுத்து, அல் உம்மா இயக்க நிறுவனர் பாஷா உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், 2007ல் விசாரணை முடிந்து, 30 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.




Also Read : கடலூர் பள்ளி வேன் -ரயில் விபத்து: கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
27 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது
இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி 2025 ஜூலை 10ஆம் தேதியான இன்று கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சாதிக் என்ற டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். 2025 ஜூலை 10ஆம் தேதியான இன்று டெய்லர் ராஜாவை போலீசார் கோவை அழைத்து வருகின்றனர். கர்நாடகவில் பதுங்கி இருப்பதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு விரைந்த தமிழக போலீசார் சாதிக்கை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கர்நாடகாவில் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரை போலீசார் கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராஜா ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து, நீதிமன்றம் அவரை ஜூலை 24 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
Also Read : அஜித்குமார் காவல் மரணம்: நிகிதா புகார் பொய்யா? சிபிஐ விசாரணையில் புதிய குழப்பம்
இவர் சாதிக் ராஜா, வளர்ந்த ராஜா, டெய்லா ராஜா என தனது பெயர்களை மாற்றிக் கொண்டு இவ்வளவு காலம் வாழ்ந்து வந்துள்ளார். 1998 தொடர் குண்டுவெடிப்புகளைத் தவிர, அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 1995ஆம் ஆண்டு நாகூரில் சயீதா கொலை வழக்கு, 1997இல் மதுரையில் ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை வழக்கிலும் ராஜா குற்றவாளியாக உள்ளார். சமீபத்தில் பயங்கரவாத தொடர்பாக வழக்கில் நீண்ட ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி என்கிற யூனுஸ் ஆகியோரையும் தமிழக போலீஸ் கைது செய்தனர் என்பவர் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
நமது #DravidianModel அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023-ஆம் ஆண்டில், தீவிரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின் கீழ், #AntiTerrorismSquad புதிதாக உருவாக்கப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாடு காவல்துறை, ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை… pic.twitter.com/YWdpo2e8HL
— M.K.Stalin (@mkstalin) July 10, 2025
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்” என தெரிவித்தார்.