Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கடலூர் பள்ளி வேன் -ரயில் விபத்து: கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Tamil Nadu Train Accident: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா அலட்சியத்தால் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் பள்ளி வேன் -ரயில் விபத்து: கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கேட் கீப்பர் கைதுImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 09 Jul 2025 11:09 AM

கடலூர் ஜூலை 09: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் (Semmanguppam, Cuddalore District) அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதிய கோர விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். சம்பவத்துக்குப் பொறுப்பாக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா (Railway Gatekeeper Pankaj Sharma) தூங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு ரெயில்வே நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது. இனி இத்தகைய விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்து

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே உள்ள ரெயில்வே கேட் பகுதியில், தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. சின்னகாட்டு சாகை மற்றும் தொண்டமாநத்தம் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் சாருமதி (16), செழியன் (15), நிமலேஷ் (12) ஆகியோர் இந்த விபத்தில் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read: புதுக்கோட்டை : பேனரில் அமைச்சர் மெய்யநாதன் படம் மிஸ்ஸிங்.. வாக்குவாதம்

கேட் கீப்பராக பணியாற்றிய பங்கஜ் சர்மா கைது

கேட் கீப்பராக பணியாற்றிய பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரெயில்வே கேட்டை நேரத்திற்கு முறையாக மூடாமல் அலட்சியமாக இருந்ததற்காக, அவரது மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தெற்கு ரெயில்வே நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விபத்து ஏற்பட்டபோது, ரெயில்வே கேட் திறந்திருந்ததாகவும், அந்த நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கிக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது பொறுப்பாக செயல்படவில்லை என்ற காரணத்தினால், பொதுமக்கள் ஆத்திரமடைந்து தாக்குதல் நடத்தியதுடன், போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேட் கீப்பர் பணியிடை நீக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக, தெற்கு ரெயில்வே நிர்வாகம் கேட் கீப்பரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங், மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் சென்று விபத்து இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

ரெயில்வே கேட் பகுதியில் “இன்டர் லாக்” முறை அமல்படுத்தப்படாதது என்பதாலும், ரெயில்வே மற்றும் சாலை போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாதது என்பதாலும் பாதுகாப்பில் பிழை ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இனி இத்தகைய விபத்துகள் தவிர்க்கப்படும் வகையில், பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என ரெயில்வே தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.