கடலூர்: பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்து – 2 மாணவர்கள் பலி!
School Van Hit By Train | கடலூரில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரி, ஜுலை 08 : கடலூர் (Cuddalore) அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், இந்த கோர விபத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பள்ளி பேருந்து ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்து
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி பேருந்து ஒன்று ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது அங்கு வந்த ரயில், பள்ளி பேருந்தின் மீது மோதி கடும் விபத்துக்கு உள்ளானது. ரயில், பேருந்தின் மீது மோதி 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த கோர விபத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பள்ளி வேனில் மூன்று மாணவர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அ அகியோர் பயணம் செய்துள்ளனர். இதில் 6 ஆம் வகுப்பு படித்து வந்த இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடைபெற்ற பகுதியில் பள்ளி மாணவர்களின் புத்தக பைகளும், மாணவர்களின் உடல் பாகங்களும் சிதறி கிடப்பது பார்ப்பதற்கு பதைபதைக்க வைக்கும் விதமாக உள்ளதாக அந்த பகுதில் உள்ள மக்கள் கூறியுள்ளனர். வேன் மீது ரயில் மோதியதால் சுக்குநூறாக நொறுங்கிய ரயில், தூக்கி எறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், விபத்து நடைபெற்ற பகுதிக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.




கேட் கீப்பரின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்து?
இந்த நிலையில், பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதற்கு கேட் கீப்பர் தான் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ரயில்வே கேட்டை மூடாமல் கேட் கீப்பர் தூங்கியதாகவும், கேட்டை மூடாததே இதற்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை சரமாரியாக தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.