Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அஜித் குமாரின் தம்பிக்கு உடல்நல பாதிப்பு… காவலர்கள் தாக்கியதால் காயம்? வெளியான அதிர்ச்சி தகவல்!

Sivaganga Custodial Death : சிவகங்கை மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், அஜித் குமாரின் தம்பி நவீன் குமாருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன்னை போலீசார் தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார்.

அஜித் குமாரின் தம்பிக்கு உடல்நல பாதிப்பு… காவலர்கள் தாக்கியதால் காயம்? வெளியான அதிர்ச்சி தகவல்!
சிவகங்கை இளைஞர் அஜித் குமார் மரண வழக்கு
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 07 Jul 2025 07:38 AM

சிவகங்கை, ஜூலை 07 : சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் உயிரிழந்த (Sivaganga Custodial Death) சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், அஜித் குமாரின் தம்பிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்தார். விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், இதனால் உள் காயங்கள் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் தனக்கு காயம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். இது விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலின் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித் குமார். காரில் வைத்திருந்த 9 சவரன் நகை காணவில்லை நிகிதா என்பவர் புகார் அளித்துள்ளார்.

அஜித் குமாரின் மரணம்

இதன் அடிப்படையில், அஜித் குமார் உள்ளிட்டோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். பின்னர், அடுத்த நாள் அஜித் குமார் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த விஷயம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், அஜித் குமாரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில்,  அஜித் குமாரை போலீசார் தாக்கியது  உறுதியானது. அதோடு, பிரேத பரிசோதனை அறிக்கையில், அஜித் குமாரின் உடலில் 44 காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, அஜித் குமார் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து,  இதில் முக்கிய சாட்டசியாக அஜித் குமார் வீடியோ கருதப்படுகிறது. இந்த வீடியோ நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து, இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்ட்டனர். இந்த வழக்கை முதலில் சிபிசிஐடிக்கு விசாரணை நடத்தி வந்த நிலையில், தமிழக அரசு சிபிஐ விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.

அஜித் குமாரின் தம்பிக்கு உடல்நல பாதிப்பு

இந்த நிலையில், உயிரிழந்த அஜித் குமாரின் தம்பி நவீன் குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளார். விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், இதனால் உள் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனால், நவீன் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நவீன் குமார் 2025 ஜூலை 6ஆம் தேதியான நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், நவீன் குமாருக்கு ஸ்கேன் மற்றும் பிற பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து, சிசிக்சை முடிந்து நவீன் குமார் வீடு திரும்பி இருக்கிறார்.

இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, முதல்வர் ஸ்டாலினும் தொலைபேசி வாயிலாக அஜித் குமாரின் தயாரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். மேலும், அவரது குடும்பத்திற்கு அரசு தரப்பில் வீட்டு மனைப் பட்டாவும், அவரது தம்பி நவீன் குமாருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.