Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இளைஞர் அஜித்குமார் மரணம்.. வீடியோ எடுத்தவருக்கு மிரட்டல்.. டிஜிபிக்கு பரபர கடிதம்!

Sivaganga Ajith Kumar Custodial Death : சிவகங்கை அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் சக்தீஸ்வரன் பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதனால் தனக்கு மற்றும பிற சாட்சியாளர்களுக்கும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இளைஞர் அஜித்குமார் மரணம்.. வீடியோ எடுத்தவருக்கு மிரட்டல்.. டிஜிபிக்கு பரபர கடிதம்!
சிவகங்கை அஜித்குமார் மரண வழக்கு
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Jul 2025 17:11 PM

சிவகங்கை, ஜூலை 03 : சிவகங்கையில் காவலாளி அஜித்குமார் (Sivaganga custodial Death) தாக்கப்படுவதை வீடியோவாக பதிவு செய்த நபர், தனக்கு போலீசாரால் ஆபத்து இருப்பதாக கூறி டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). இவர் மடப்புரம் கோயிலில் பணிபுரிந்து வந்தார். திருட்டு புகார் ஒன்றில் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அதன்பின், உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். இந்த விவகாரம் மாநிலத்தையே உலுக்கியது. இந்த போலீசார் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனையில் அஜித் குமாரின் உடலில் 40 காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன்ர்.

வீடியோ எடுத்தவருக்கு மிரட்டல்

இது தொடர்பாக சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், அஜித்குமார் போலீசாரால் தாக்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது வீடியோ தான் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருக்கிறது.

இந்த வீடியோவை எடுத்திருந்த சக்தீஸ்வரன் என்பவர் மதுரை கிளையில் ஆஜராகி வீடியோவை ஆதாரமாக பதிவு செய்தார். அப்போது, நீதிபதி எங்கிருந்து வீடியோ எடுத்தீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது, சக்தீஸ்வரன் கோவில் பின்புறம் உள்ள கழிவறையில் இருந்து வீடியோ பதிவு செய்ததாக கூறினார்.

இந்த நிலையில், திருப்புவனம் இளைஞர் மரண வழககில் முக்கிய சாட்சியாக இருக்கும் சக்தீஸ்வரன் பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.  இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ராஜா என்ற தனிப்படை காவலருக்கு பல குற்றப்பின்னணி கொண்ட ரவுடிகளுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.

டிஜிபிக்கு பரபர கடிதம்

கடந்த மாதம் 28ஆம் தேதி காலை நான் அவரை சந்தித்தபோது எனக்கு அவர் மிரட்டல் கொடுத்தார். எனவே, உயிருக்கு கடும் அச்சறுத்தல் உள்ளது. ஆகவே, இந்த வழக்கில் சாட்சியாக உள்ள எனக்கும், பிறருக்கும் நீதிமன்ற உத்தரவின்படி, ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குவது அவசியமாகும்.

எனவே, எங்களுக்கு திருப்புவனம் அல்லாத பிற மாவட்ட போலீசாரைக் கொண்டு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்தார். இதுகுறித்து  சக்தீஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்துள்ளார். அப்போது பேசிய சக்தீஸ்வரன், “வீடியோ பதிவு செய்து வெளியிட்டதால், மிரட்டல் வருகிறது.

மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர். மனசாட்சி இருப்பதால் தான் வீடியோவை வெளியிட்டேன். அஜித்தை நான் தாக்கியதாக சிலர் கூறுகின்றனர். அப்படி செய்தார் நான் எதற்கு வீடியோ எடுக்க போகிறேன். என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் முன்வந்த பிறகு தான் பிற சாட்சியாளர்களும் தயாரானார்கள். இதனால், அவர்கள் அச்சப்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என கூறினார். இதனை அடுத்து, சக்தீஸ்வரனுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாக உள்ளது.