Sivagangai Custodial Death: ரூ. 2 லட்சம் நிவாரணம்..! அஜித் குமார் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல்!
Vijay's Consoling Visit: திருப்புவனம் அருகே போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்திற்கு தமிழ் வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் ஆறுதல் கூறினார். ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ் வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. 6 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை, ஜூலை 2: சிவகங்கை (Sivagangai) மாவட்டத்தை அடுத்த திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயில் காவலாளியான அஜித் குமாரை, விசாரணை என்ற பெயரில் காவல்துறை தனிப்படை கொடூரமாக தாக்கியது. இந்த விசாரணையின்போது அஜித் குமாரை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இந்த சம்பவம் பூதகரமாக வெடித்த நிலையில், தவெக தலைவர் விஜய் (TVK Leader Vijay), அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு கண்டனங்களை பதிவிட்டனர். இதை தொடர்ந்து, அஜித் குமாரை தாக்கிய 6 காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இந்தசூழ்நிலையில், காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல்:
Thalapathy @TVKVijayHQ visits Thirupuvanam and personally meets the family of Ajith Kumar. A heartfelt gesture in a moment of grief. 💔 pic.twitter.com/AJgiNRnhhh
— Vijay Fans Trends (@VijayFansTrends) July 2, 2025
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழ்நாடு காவல்துறை தாக்கி உயிரிழந்த அஜித் குமார் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து, வீட்டிலிருந்த அஜித் குமாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சிறிதுநேரம் அஞ்சலி செலுத்தினார். விஜயுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர். இதன் தொடர்ச்சியாக, அஜித் குமாரின் தாயார் மாலதி மற்றும் சகோதரர் நவீன் குமாரிடம் ஆறுதலாக பேசினார். தொடர்ந்து, தவெக சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக விஜய் தெரிவித்தார்.




தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:
Thiruppuvanam police assault victim Ajithkumar’s family consoled in person by TVK leader Vijay !! pic.twitter.com/JkXZdyzblV
— Ayyappan (@Ayyappan_1504) July 2, 2025
தமிழ்நாடு காவல்துறையின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமார் மறைவை கண்டித்து, வருகின்ற 2025 ஜூலை 5ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.