Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Srikanth, Krishna Drug Case: ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கு.. ஜாமீன் மனு தொடர்பாக நாளை தீர்ப்பு!

Tamil Actors Srikanth and Krishna's Bail Plea: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் போதைப்பொருள் வழக்கு ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. வழக்கறிஞர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அரசுத்தரப்பு வழக்கறிஞர், பிரசாத் மற்றும் பிரவீன் குமார் வழக்குகளுடன் இணைக்கப்பட்ட விவரங்களை தெரிவித்தார். நடிகர்கள் மீது போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது. ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 2025 ஜூலை 8ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

Srikanth, Krishna Drug Case: ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கு.. ஜாமீன் மனு தொடர்பாக நாளை தீர்ப்பு!
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா
mukesh-kannan
Mukesh Kannan | Published: 07 Jul 2025 18:12 PM

சென்னை, ஜூலை 7: போதைப்பொருள் (Drug Case) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த் (Srikanth) மற்றும் கிருஷ்ணாவின் (Krishna) ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவு நாளை அதாவது 2025 ஜூலை 8ம் தேதி பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2025 ஜூன் மாதம் போதைப்பொருள் வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகிய தமிழ் திரைப்பட நடிகர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையானது நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரதீப் குமார் அளித்த ஒப்புதலை அடிப்படையாக கொண்டே ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், நடிகர் ஸ்ரீகாந்திடம் இருந்து எந்தவொரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்தார்.

நடிகர் கிருஷ்ணா தரப்பில் வாதம்:

இதை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா சார்பாக வழக்கறிஞர் இன்பண்ட் தினேஷ் ஆஜரானார். அப்போது, காவல்துறையினர் அனுப்பிய சம்மனை ஏற்றுகொண்டு விசாரணைக்கு ஆஜரான நிலையிலும் நடிகர் கிருஷ்ணா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் தரப்பில் கைது குறித்த தகவல் மட்டுமே இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், கைதுக்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படபில்லை என்றும் இன்பண்ட் தினேஷ் தெரிவித்தார். மேலும், நடிகர் கிருஷ்ணாவிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது எதுவும் நிரூபிக்கப்படபில்லை என நீதிபதி முன் வாதிட்டார்.

நீதிபதி கேள்வி:

நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் கிருஷ்ணா தரப்பு வாதத்தை கேட்டபிறகு நீதிபதி அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் இருவரும் எவ்வளவு போதைப்பொருட்களை வாங்கினர் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அரசுத்தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்கையில், ” மது பார் ஒன்றில் நடந்த மோதலில் கொலை முயற்சி வழக்கி அதிமுக முன்னாள் நிர்வாகியான பிரசாத் கைது செய்யப்பட்டார். இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் போதை பொருள் புழக்கம் தொடர்பான விஷயம் தெரிய வந்தது. தொடர்ந்து, பிரசாத் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தினை அடிப்படையாக கொண்டு பிரவீன் குமார் கைது செய்யப்பட்டார்.

பிரவீன் குமார் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2025 ஜூன் 23ம் தேதியும், நடிகர் கிருஷ்ணா கடந்த 2025 ஜூன் 26ம் தேதியும் கைது செய்யப்பட்டனர்’ என்று தெரிவித்தார்.

ஜாமீன் மனு மீதான உத்தரவு எப்போது..?

இதைகேட்ட ஸ்ரீகாந்த் தரப்பு வழக்கறிஞரான ஜான் சத்யன், வீட்டில் குழந்தைகளுடன் நடிகர் ஸ்ரீகாந்த் விளையாடி கொண்டிருந்தபோது காவல்துறையினர் கைது செய்தனர் என்று கூறினார். இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் நாளை அதாவது 2025 ஜூலை 8ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி நிர்மல்குமார் அறிவிப்பை வெளியிட்டார்.