Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Minister Geetha Jeevan: தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடலா..? மறுப்பு தெரிவித்த அமைச்சர் கீதா ஜீவன்!

Anganwadi Shortage in Tamil Nadu: தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக வெளியான செய்தி தவறானது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். ஆனால், 28,000க்கும் மேற்பட்ட பணியாளர் பற்றாக்குறை காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகின்றனர். அரசு 7,842 பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இருப்பினும், பணியாளர் பற்றாக்குறை தொடர்ந்து அங்கன்வாடி மையங்களின் செயல்பாட்டை பாதிக்கிறது.

Minister Geetha Jeevan: தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடலா..? மறுப்பு தெரிவித்த அமைச்சர் கீதா ஜீவன்!
அங்கன்வாடி மையங்கள்Image Source: social media
mukesh-kannan
Mukesh Kannan | Published: 07 Jul 2025 15:54 PM

சென்னை, ஜூலை 7: தமிழ்நாடு (Tamil Nadu) முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் (Anganwadi Shortage) பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நடைபெற்று வரும் 2025ம் ஆண்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மட்டும் சுமார் 147 மையங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவை சேர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனின் பாதிப்பை தரும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல நேரங்களில் ஆள் பற்றாக்குறை காரணமாக ஒரு ஆசிரியர் பல மையங்களை கையாள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், மேற்பார்வை மற்றும் சேவைகள் என 2லிலும் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த நெருக்கடி குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சேவைகளில் கவலையை ஏற்படுத்துகிறது. இதனால்தான், தமிழ்நாடு முழுவதும் சுமார் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடிகள் மூடப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது என்று அமைச்சர் கீதா ஜீவன் (Minister Geetha Jeevan) தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்:

தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக எழுந்த செய்திகள் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், “சில நாளிதழ்களில் தவறான செய்தி வெளியாகி வருகிறது. தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது. தமிழ்நாட்டில் இயங்கிவரும் 54,483 மையங்கள் தொடர்ந்து செயல்படும். வெளியான செய்திகளில் அங்கன்வாடி மையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப தயங்குவதாகவும், இந்த 2025 வருடம் மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படும் என்று கூறப்பட்டது. இந்த செய்தி உண்மைக்கு மாறானது” என்று தெரிவித்தார்.

அங்கன்வாடி மையங்கள் மூடப்படும் என்ற செய்திக்கு காரணம் என்ன..?

தமிழ்நாட்டில் மொத்தம் 54,483 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் பொதுவாக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சமையல்காரர் பணியாற்றுவார்கள். இருப்பினும், தமிழ்நாட்டில் இன்று வரை 28,000 க்கும் மேற்பட்ட பதவிகள் காலியாகவே உள்ளன. இதில், தோராயமாக 9,000 ஆசிரியர்கள் தேவையாக உள்ளன. 2018 முதல் புதிய நியமனங்கள் இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தேவைப்படும் 1.04 லட்ச ஊழியர்களில் 75,468 பேர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகின்றனர். தற்போதுள்ள பணியாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. பணியாளர் பற்றாக்குறை, மாணவர் சேர்க்கையில் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புவதில் அதிக தயக்கம் காட்டி வருகின்றனர். அதிக கட்டணம் இருந்தபோதிலும், பலர் தனியார் நடத்தும் பிளே ஸ்கூல்களை தேர்வு செய்கிறார்கள்.

நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, 3,886 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட 7,842 பணியிடங்களை நிரப்புவதற்கான திட்டங்களை மாநில அரசு அறிவித்துள்ளது, ஆனால் காலியிடங்களின் அளவைக் கருத்தில் கொண்டு இது போதுமானதாக இல்லை என்று தொழிலாளர்களும் ஆர்வலர்களும் கூறுகின்றனர்.