போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு.. காரை வழிமறித்து நகை கொள்ளை. . கோவையில் பயங்கரம்!
Coimbatore Crime News : கோவை மாவட்டத்தில் போலீஸ் ஏட்டுவை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு, அவரது மனைவியிடம் இருந்து 5 சவரன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் சென்றுக் கொண்டிருந்த இவர்களிடம், 3 பேர் கும்பல் வழிமறித்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

கோயம்புத்தூர், ஜூலை 07 : கோவை மாவட்டத்தில் போலீஸ் ஏட்டுவை மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோது, அவரது மனைவியிடம் இருந்து 5 சவரன் நகைகளை பறித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (52). இவர் கோவை கியூ பிராஞ்ச் போலீசில் ஹெட் கான்ஸ்டபிள் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், பார்த்திபன் 2025 ஜூலை 5ஆம் தேதி இரது தனது மனைவியுடன் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக சூலூர் கொச்சின் பைபாஸ் சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்துள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மர்ம நபர்கள் பார்த்திபன் மற்றும் அவரது மனைவி சென்றுக் கொண்டிருந்த காரை மர்ம கும்பல் வழிமறித்துள்ளது.
போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு
மூன்று பேர் கொண்ட கும்பல், பார்த்திபனை சரிமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இதில், பார்த்திபனின் தலையில் காயங்கள் ஏற்பட்டு, அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை அடுத்து, அவரது மனைவியிடம் இருந்து செயின், மோதிரம், பிரேஸ்ரெட் உள்ளிட்ட 5 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளது.
இதனை அடுத்து, பார்த்திபன் மனைவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த பார்த்திபனை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




மேலும், பார்த்திபன் காவல் நிலையத்தில் புகார் அளிதுதள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகையை பறித்த கும்பல் யார்? கொள்ளை கும்பலா அல்லது பார்த்திபனை குறிவைத்து கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தவர்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சமீப நாட்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, மூதாட்டிகளை குறிவைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு, கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மற்றொரு சம்பவம்
இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அண்மையில், நெல்லையில் காவலரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. தகராறை தட்டிக் கேட்டதால், ஆத்திரத்தி காவலரை போலீசார் அரிவாளால் வெட்டியுள்ளனர். அண்மையில், நெல்லையில் காவலரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. தகராறை தட்டிக் கேட்டதால், ஆத்திரத்தி காவலரை போலீசார் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
வஉசி மைதானத்தில் நீண்ட நேரமாக கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், அங்கிருநத காவலர் ரஹ்மத்துல்லா அவர்களிடம் என்ன பிரச்னை என்று கேட்டிருக்கிறார். இதில், இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கும்பல் காவலர் ரஹ்மத்துல்லாவை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதனை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.