Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திண்டுக்கலில் சளி மருந்து குடித்த 1½ வயது பச்சிளம் குழந்தை உயிரிழந்த சோகம்!

Dindigul Cold Medicine Death: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, ஒன்றரை வயது குழந்தை சளி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையில் வாங்கிய மருந்தை குடித்த பின் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

திண்டுக்கலில் சளி மருந்து குடித்த 1½ வயது பச்சிளம் குழந்தை உயிரிழந்த சோகம்!
குழந்தை உயிரிழப்புImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 06 Jul 2025 14:27 PM

திண்டுக்கல் ஜூலை 06: திண்டுக்கல் மாவட்டம் (Dindigul District) நிலக்கோட்டை அருகே சளி மருந்து குடித்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.புதூரை சேர்ந்த சின்னபாண்டி-பானுப்பிரியா தம்பதியின் (Chinnapandi-Bhanupriya couple) மகனாக பிரணித் (Praneeth) இருந்தார். அண்மையில் சளி ஏற்பட்ட நிலையில் மருந்து வாங்கி குடிக்க வைத்துள்ளனர். பின்னர் குழந்தை உடல்நிலை மோசமடைந்ததால், வத்தலக்குண்டு, திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. நிலக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சளி மருந்து குடித்த 1½ வயது பச்சிளம் குழந்தை உயிரிழந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னபாண்டி என்பவர் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். அவரது மனைவி பானுப்பிரியா. இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரணித் என்ற ஒன்றரை வயது மகன் இருந்தார். கடந்த ஜூன் 26-ந்தேதி, பிரணித்துக்கு சளி ஏற்படவே, பெற்றோர் அருகிலுள்ள கடையில் இருந்து சளி மருந்து வாங்கி குடித்துவைத்து, இரவில் தூங்க வைத்தனர்.

மதுரை அரசு மருத்துவமனைக்கும் மாற்றம்

அந்த இரவு அதிகாலை 4 மணியளவில் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பிரணித்தை வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார்.

ஆனால் தீவிர சிகிச்சையிலும் பலனின்றி, கடந்த 4-ம் தேதி பிரணித் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு கடையில் இருந்து மருந்து வாங்கி கொடுக்கலாமா?

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, ஒன்றரை வயது குழந்தை சளி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையில் வாங்கிய மருந்தை குடித்த பின் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதன் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு கடையில் இருந்து மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் வாங்கி கொடுத்து விடக்கூடாது. சிறிய வயதில் உடல் அமைப்பு மிகவும் நேர்த்தியானதும், மருந்துகளுக்கு மீதான எதிர்வினை மிக அதிகமாகவும் இருக்கும்.

சில மருந்துகள் வயது, எடை மற்றும் உடல்நிலையை பொருத்தே அளவிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். தவறான மருந்து அல்லது தவறான அளவு குடுத்தால் உயிருக்கு ஆபத்தாகலாம். எனவே, குழந்தைக்கு சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கும் சிறுவாரியான மருத்துவரின் ஆலோசனை தவிர்க்க முடியாதது.