லாக்கப் டெத் அஜித்குமார் மரணம் மறைவதற்குள் கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு சம்பவம்…
Kallakurichi Police: துபாயில் வேலை வழங்குவதாக நம்பவைத்து ஜெயபால் உயிரிழந்ததால் அவரது மனைவி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து உறவினரான விக்கி நேரில் கேட்டதற்காக போலீசாரால் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அஜித் குமார் மரண விவகாரம் குறைந்தபோது மறுமுறை காவல் வன்முறையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி ஜூலை 05: கள்ளக்குறிச்சி (Kallakurichi) மாவட்டத்தில், துபாய் வேலைவாய்ப்பு தருவதாக நம்பவைத்த ஜெயபால் (Jayapaul) திரும்பி வந்து மூன்று நாளில் உயிரிழந்தார். அவரது மனைவி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் நடவடிக்கை இல்லை. இதனால், அவரது உறவினரான விக்கி நேரில் போலீசாரிடம் புகார் கூற சென்ற போது, தாக்கப்பட்டு உள்ளே இழுத்துச் செல்லப்பட்டார். இந்த தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார் (Ajith kumar Lockup death) காவல் மரணத்திற்கு பிறகு மீண்டும் காவல் முறைகேடு சம்பவம் வெளியானதால் கண்டனம் கிளம்பியுள்ளது.
துபாய் வேலை ஆசையால் பறிபோன உயிர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏர்வாய்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர், துபாயில் வேலைக்கு அனுப்பப்படுவதாக நம்பி, அந்த ஊரைச் சேர்ந்த சக்திவேலின் மகன் விஜய் மூலம் 2024ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் அந்நாட்டிற்கு சென்றார். ஆனால் வேலை கிடைக்காமலேயே, சுகாதாரக் குறைபாடுடன் வென்டிலேட்டர் உதவியுடன் தமிழகத்துக்குத் திரும்பிய அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று மூன்று நாட்களில் உயிரிழந்தார்.
கொலை மிரட்டல் – போலீசாரின் நடவடிக்கை பற்றி புகார்
இந்த நிலையில் ஜெயபாலின் மனைவி மலர், அவரது கணவரை துபாய்க்கு அனுப்பிய விஜய் மற்றும் அவரது உறவினர் மிரட்டியதாகக் கூறி, கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரண்டு மாதங்கள் கழிந்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மலர் நீதிமன்றத்தை நாட, நீதிமன்றம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டது.




போலீஸ் தாக்குதல் வீடியோ – மற்றுமொரு பெரும் அதிர்ச்சி
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தபோதும் விசாரணை இல்லை என தெரிகிறது. இதனால் மலரின் அக்கா மகனான விக்கி, தன் சித்தப்பா மரணத்துக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை கோரினார். இதற்காக அவர் நேரில் காவல் நிலையம் சென்றபோது, போலீசார் அவரை தாக்கி, உள்ளே இழுத்துச் சென்று தாக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் குமார் வழக்குக்குப் பிறகு – மீண்டும் காவல் நிலைய தாக்குதல்!
சமீபத்தில் சிவகங்கையில் காவலாளி அஜித் குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபின் மரணம் அடைந்த விவகாரம் மழுங்கிப் போகாத நிலையில், கள்ளக்குறிச்சி போலீசாரின் வீடியோ வீடியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களுக்கும், நடவடிக்கை எடுக்காமல் இருந்த உயர் அதிகாரிகளுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.