Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sivagangai Custodial Death: சிவகங்கை லாக்அப் டெத்..! காவல்துறையை கடுமையாக விளாசிய உயர்நீதிமன்ற மதுரை கிளை!

Ajith Kumar's Custodial Death: சிவகங்கை மாவட்டத்தில் கோயில் பாதுகாவலர் அஜித் குமார் காவல் துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் 6 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை உயர்நீதிமன்றம், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பி, அரசே பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அஜித் குமாரின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Sivagangai Custodial Death: சிவகங்கை லாக்அப் டெத்..! காவல்துறையை கடுமையாக விளாசிய உயர்நீதிமன்ற மதுரை கிளை!
உயிரிழந்த அஜித் குமார் - உயர்நீதிமன்றம் மதுரை கிளைImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Jul 2025 15:02 PM

மதுரை, ஜூலை 1: சிவகங்கை மாவட்டத்தில் (Sivagangai) கோயில் பாதுகாவலராக இருந்த 27 வயதான அஜித் குமார் என்பவரை காவலர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக (Lockup Dead) எழுந்த புகார் தொடர்பாக 6 காவலர்கள் கடந்த 2025 ஜூன் 30ம் தேதி இரவு கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, நீதித்துறை மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் விமர்சனங்களை தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக மேற்கொண்டதாக தமிழ்நாடு காவல்துறை (Tamil Nadu Police) சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அஜித்குமார் தாக்கப்பட்டு கோயிலின் பின்புறத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் சிவகங்கை நீதிபதி நேற்று அதாவது 2025 ஜூன் 30ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். இந்தநிலையில், அஜித் குமார் தாக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மதுரை கிளை சரமாரி கேள்வி:

இதை தொடர்ந்து, 2025 ஜூலை 1ம் தேதியான இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, அஜித் குமார் லாக் அப் தொடர்பான வழக்கை விசாரித்தது. அப்போது, சிவகங்கை காவல்துறையினரிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். அதில், 27 வயதான அஜித் குமார் என்ற கோயில் பாதுகாவலர் உயிரிழந்தது தொடர்பான சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத்தை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக பணியிட மாற்றம் செய்தது ஏன்..? இந்த வழக்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் எதிர்கொள்ள வேண்டியதுதான் சரியான ஒன்று. காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராகக்ள் செயல்படவில்லையா..? அஜித் குமாரை வெளி இடங்களுக்கு கொண்டு சென்று விசாரித்தது ஏன்..? அஜித்தை வெளியே அழைத்து சென்று விசாரித்ததற்கு அதிகாரம் கொடுத்தது யார்..? காவல்துறையினர் குடும்பத்தில் யாரேனும் இப்படி இறந்தால் என்ன செய்திருப்பீர்கள்..? மக்களை பாதுகாக்கவே காவல்துறை உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை முக்கியம்தான். ஆனால், ஒரு வழக்கை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதும் மிக மிக முக்கியம். இந்த கேள்விகளுக்கு டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.” என தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசே பொறுப்பு:

தொடர்ந்து மதுரை கிளை உயர்நீதிமன்றம், “அஜித் குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பான முழு உண்மையை காவல்துறையினர் மறைப்பது ஏன்..? நகை திருட்டு வழக்கை தனிப்படை விசாரித்தது ஏன்..? மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்படும். உயிரிழந்த அஜித் குமார் உடலை உடல் கூறாய்வு அறிக்கையை இன்று அதாவது 2025 ஜூலை 1ம் தேதி மாலை 3 மணியளவில் மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் உடனே சமர்பிக்க வேண்டும். விசாரணை நடத்திய நீதிபதி அவரது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்தது. தொடர்ந்து, உயிரிழந்த அஜித் குமாரின் உறவினர்கள் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதியிடம் முன்வைத்தனர்.