சிவகங்கை இளைஞர் அஜித் குமார் மரணம்.. 5 போலீசார் கைது.. கொலை வழக்காக மாற்றம்!
Sivaganga Custodial Death : சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித் மரண வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அடிப்படையில், அஜித் குமார் மரண வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அஜித் குமாரின் உடலில் 30 முதல் 40 காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சிவகங்கை, ஜூலை 01 : சிவகங்கை மடம்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் தொடர்பாக (Sivaganga Custodial Death) 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பாக 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், 5 காவலர்கள் கைதாகி உள்ளனர். பிரேத பரிசோதனை அடிப்படையில், அஜித் குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. 2025 ஜூலை 28ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் மர்ம முறையில் உயிரிழந்தார். அஜித் குமாரை திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதாவது, மடப்புரம் கோயிலில் காவலாளியாக வேலை செய்து வந்தவர் அஜித் குமார். சம்பவத்தன்று கோயிலில் நிறுவத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் 9 சவரன் நகை காணாமல் போனதாக சம்பந்தப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இளைஞர் அஜித் குமார் மரணம்
இதனை அடுத்து, அஜித் குமார் உட்பட பலரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இதில் அஜித் குமார் தவிர மற்ற அனைவரையும் அனுப்பி வைத்துள்ளனர். இதில், அஜித் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.




காவலர்கள் தொடர்ந்து தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், அஜித் குமாரின் பிரேத பரிசோதனையும் நடந்தது.
இதற்காக தகவல்கள் 2025 ஜூன் 30ஆம் தேதியான நேற்று வெளியானது. இதனை அடுத்து, அஜித் குமாரின் மரண வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இது தெதாடர்பகா திருப்புவனம் காவல் நிலையத்தில் பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு எண் 196(2)ஏ-ன் கீழ் குற்ற எண் 303/2025-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதித்துறை விசாரணைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
காவலர்கள் 5 பேர் கைது
இதனை அடுத்து, 5 காவர்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவரின் உடலில் குறைந்தது 30 முதல் 40 வரையிலான காயங்கள் காணப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசனவாயில் லத்தி அடிக்கப்பட்ட அடையாளங்களும், தலையில் காயங்களும் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கை, கால்களில் காயங்கள் இருந்ததாகவும், உட்புற பாகங்களிலும் காயங்கள், ரத்தக்கசிவு இருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், போலீசிடமிருந்து தப்பிக்க முயற்சித்த போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
போராட்டம்
Krishnagiri, Tamil Nadu: AIADMK workers staged a protest at Kaveripattinam bus stand demanding justice for Ajith Kumar, who died in Sivaganga prison pic.twitter.com/ei5AZcug22
— IANS (@ians_india) June 30, 2025
இந்த சம்பவம் தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் லாக் மரணங்களுக்கு எதிராக வலுவான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அதோடு, பல்வேறு இடங்களில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அஜித் குமாரின் உறவினர்கள், குடும்பத்தினர் நீதிக்காக போராட்டம் நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.