ஈவு இரக்கமின்றி தாக்கிய போலீஸ்.. அலறும் இளைஞர் அஜித் குமார்.. காவல் நிலையத்தில் என்ன நடந்தது?
Sivaganga Custodial Death : சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தது மாநிலத்தையை உலுக்கியுள்ளது. இந்த நிலையில், அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் குமாரை கண்மூடித்தனமாக குச்சியால் போலீசார் தாக்குவது பதிவாகி உள்ளது.

சிவகங்கை, ஜூலை 01 : சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் (Sivaganga Custodial Death) உயிரிழந்தது மாநிலத்தையை உலுக்கியுள்ளது. இந்த நிலையில், அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் குமாரை கண்மூடித்தனமாக குச்சியால் போலீசார் தாக்குவது பதிவாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயிலில் பணிபுரிந்து வந்தவர் 27 வயதான அஜித் குமார். இவர் அக்கோயிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், அக்கோயிலுக்கு மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் காரில் வந்துள்ளார். அப்போது, அவர் தரிசனத்தை முடித்துவிட்டு வந்து பார்த்தபோது, காரில் வைத்திருந்த 9 சவரன் நகை காணாமல் போனதாக அவர் மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் புகார் அளித்துள்ளார்.
சிவகங்கை இளைஞர் மரணம்
இது தொடர்பாக விசாரிக்க அஜித் குமார் உள்ளிட்ட சிலரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர். பின்னர், அஜித் குமார் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பிரச்னையாக வெடித்தது. அஜித் குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் தாக்கியதால் தான் அஜித் குமார் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றச்சாட்டி ஈடுபட்டனர்.
மேலும், அஜித் குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லாமல், தோப்பு பகுதிக்கு அழைத்து சென்று தாக்கியதாகவும் குற்றச்சாட்டினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி போலீசார் 5 காவல்களை கைது செய்தனர். மேலும், 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.




மேலும், அஜித் குமாரின் பிரேத பரிசோதனை 2025 ஜூன் 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் அஜித் குமாரின் உடலில் 30 காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அஜித் குமாரின் கை, கால்கள், உட்புற உறுப்புகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், ரத்தக்கசிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
கொடூரமாக தாக்கிய போலீஸ்
மேலும், மரண வழக்கை கொலை வழக்கமாக பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றறப்பட்டுள்ளார். இப்படியான சூழலில், அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இதில், குச்சியால் அஜித் குமாரை ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கியது வீடியோவில் பதிவாகி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனவும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். மேலும், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு 2025 ஜூலை 1ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையை சரமாரியாக கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.