Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sivagangai Custodial Death: ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை.. சிசிடிவி காட்சிகளை மாற்றக்கூடாது! மாநில அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

Tamil Nadu Police Brutality: சிவகங்கை அருகே திருப்புவனத்தில், காவல்துறையினரால் தாக்கப்பட்டு 27 வயதான அஜித் குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறையினரின் கொடூர செயல்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sivagangai Custodial Death: ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை.. சிசிடிவி காட்சிகளை மாற்றக்கூடாது! மாநில அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
உயிரிழந்த அஜித் குமார் புகைப்படம்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 01 Jul 2025 17:39 PM

மதுரை, ஜூலை 1: சிவகங்கை (Sivagangai) அடுத்த திருப்புவனத்தில் உள்ள மதபுரம் பத்ரகாளி அம்மன் கோயிலில் 27 வயதான அஜித் குமார் என்ற இளைஞர் தற்காலிக காவலராக பணிபுரிந்து வந்தார். அவரை ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்டார். பாதுகாவலர் அஜித்தை நிறுத்த சொன்ன தங்கள் காரில் இருந்து சுமார் 10 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதாக 2 பெண்கள் புகார் அளித்தனர். திருப்புவனம் காவல் நிலையத்திற்கு அஜித் குமார் அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். அதேநாளில், கண்ணன் தலைமையிலான 6 பேர் கொண்ட சிறப்பு குழு (Special Police Team) அஜித் குமாரை மீண்டும் கைது செய்தது. அப்போது, அந்த காவலர்கள் கொடூரமாக தாக்கியதில் மயக்கமடைந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று அதாவது 2025 ஜூலை 1ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ​​சிறப்புக் குழு யாருடைய வழிகாட்டுதலின் பேரில் எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யாமல் விசாரணை நடத்தியது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

2025 ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு:

அஜித் குமார் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை கைது செய்து விரைவான நடவடிக்கை மேற்கொண்ட மாநில அரசுக்கு பாராட்டு தெரிவிக்க நீதிமன்றம், இதுபோன்ற சம்பவங்களுக்கு தண்டனை இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் எந்த காவல்துறை அதிகாரியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. கல்வியறிவு அதிகமுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்தில், இதுபோன்ற நிகழ்வு ஆபத்தானது என்றும் தெரிவித்தது. தொடர்ந்து, காவல்நிலைய மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்ற 2025 ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மதுரையின் IVவது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.ஜான் சுந்தர்லால் சுரேஷூக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், வருகின்ற 2025 ஜூலை 8ம் தேதிக்குள் நிலை அறிக்கையை சமர்பிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாட்சிக்கு உரிய பாதுகாப்பு:


வழக்கில் தொடர்புடைய அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பாதுகாக்க வேண்டும். எந்த மாற்றமும் செய்யக் கூடாது. சிசிடிவி காட்சிகள் மற்றும் சிடிஆர் பதிவுகள் உட்பட இதுவரை சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் விசாரிக்கும் நீதிபதியிடம் ஒப்படைக்குமாறு காவல் கண்காணிப்பாளர் (சிவகங்கை) மற்றும் புலனாய்வு அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அஜித்குமார் காவலர்களால் தாக்கப்படும் வீடியோ காட்சியை எடுத்தவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கிறார். வழக்கில் நேரில் கண்ட சாட்சிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.