பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!
Dindigul Girl Suicide: திண்டுக்கல் மாவட்டத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்து 15 வயது சிறுமி தனது சகோதரனுடன் பிஸ்கட் சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து போலீசாரி விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாச்சி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நகுலன். இவருக்கு 15 வயதில் ரிச்சியா என்ற மகள் இருந்தார். 13 வயதில் ரித்திகன் என்ற மகன் உள்ளார். ரிச்சியா, சத்திரப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ரிச்சியாவுக்கும், அவரது சகோதரர் ரித்திகனுக்கும் இடையே பிஸ்கட் சாப்பிடுவதில் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியதுடன் தங்களது காலணிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த நகுலன் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை சமாதானம் செய்துள்ளனர். ஆனால், ரிச்சியா சமாதானம் ஆகாமல் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த மாணவி ரிச்ச்சியா வீட்டின் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.
மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த மாணவி
ஏதோ கோபத்தில் உள்ளே சென்று விட்டதாக அவரது பெற்றோரும் எண்ணி உள்ளனர். ஆனால், வெகு நேரமாகியும் ரிச்சியா வெளியே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. உடனே, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மாணவியில் ரிச்சியா வீட்டின் மின்விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
மேலும் படிக்க: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வாசலில் கட்டிட தொழிலாளி கொடூர கொலை…




ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமி
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனே தூக்கில் இருந்து மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, முதலுதவி அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, ரிச்சியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தண்ணீர் மல்க கதறி அழுதனர்.
சத்திரப்பட்ட போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
இது பார்ப்போரை கண் கலங்க செய்தது. இதைத் தொடர்ந்து, மாணவியின் சடலம் கூறாய்வு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நகுலன் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சகோதரனுடன் பிஸ்கட் சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணத்தை தவிர்க்க…
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)
மேலும் படிக்க: சென்னையில் கல்லால் அடித்து தொழிலாளி கொடூர கொலை… பெயிண்டர் அதிரடி கைது!