விஸ்வநாத் & சன்ஸ் மாதிரி ஹாய் படம் இருக்குமா? இயக்குநர் விஸ்ணு எடவன் விளக்கம்
Director Vishnu Edavan talks about difference between Vishwanath And Sons | ஹாய் படத்தின் இயக்குநர் விஷ்ணு எடவன் ஹாய் படத்திற்கும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கும் உள்ள வித்யாசம் குறித்து பேசியது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா. இவர்களின் கூட்டணியில் தற்போது உருவாகி உள்ள படம் ஹாய். இந்தப் படத்தை இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கி உள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் முன்னதாக பலப் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள இந்த ஹாய் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் இயக்குநர் விஷ்ணு எடவன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.




விஸ்வநாத் & சன்ஸ் மாதிரி ஹாய் படம் இருக்குமா?
முன்னதாக சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தினை போல இந்தப் படத்திலும் வயது அதிகமான ஒருவரை காதலிப்பது போன்ற கதை என்று வைரலாகி வந்தது. அது குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் இயக்குநர் விஷ்ணு எடவன் பேசியதாவது, இல்லை, அப்படி எதுவும் இல்லை. எனது படங்கள் எப்போதும் எளிமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படங்களாகவே இருந்து வந்துள்ளன. அந்தச் சூழலிலும் கூட, சற்று சவாலான அல்லது எதிர்பாராத ஒரு அம்சத்தைச் சேர்க்க நான் விரும்புகிறேன். அவ்வளவுதான் விஷயம் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Question: We’ve heard that there’s a significant age difference between #Nayanthara and #Kavin. Is that true?#VishnuEdavan:
No, there’s nothing like that. My films have always been simple family entertainers. Even within that space, I like to include one element that feels a… pic.twitter.com/qwnnCoX4aK
— Movie Tamil (@_MovieTamil) July 26, 2026
Also Read… என்ன விஜய் டிவி ரசிகர்களே தயாரா? விரைவில் வரும் புது தொடர்.. அட இந்த சீரியலின் ரீமேக்கா?