என்ன விஜய் டிவி ரசிகர்களே தயாரா? விரைவில் வரும் புது தொடர்.. அட இந்த சீரியலின் ரீமேக்கா?
Vijay Tv Upcoming Remade Serial: தமிழில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியலுக்காகவே பிரபலமான தொலைக்காட்சிதான் விஜய் டிவி. இந்த டிவியில் சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. இந்நிலையில், தற்போது புது சீரியல் ஒன்று விரைவில் உருவாகிறதாம். அது எந்த சீரியலின் ரீமேக் என பார்க்கலாம்.
விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) தொடர்ந்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என பல ஒளிபரப்பப்பட்டுவருகிறது. தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது விஜய் டிவிதான். இந்த சேனலுக்கு நேரடி போட்டியாக இருப்பது சன் டிவியின் சீரியல்கள் மட்டுமே. இந்த இரு தொலைக்காட்சிகள் இடையே மட்டுமே டிஆர்பி ரேட்டிங் பிரச்சனைகள் இருந்துவரும் என்பது தெரிந்ததே. இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் புது சீரியல் ஒன்று விரைவில் வெளியாகவுள்ளதாம். ஏற்கனவே சமீபத்தில்தான் காதல் காதல் காதல் (Kadhal kadhal Kadhal ) மற்றும் ஒண்ணா இருக்க கத்துக்கணும் (Onna Irukka Kathukanum) என இரு புத்தம் புது சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியிருந்தது.
இதையடுத்து பிரபல சீரியல் ஒன்று இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், புது சீரியல் ஒன்று வெளியாகவுள்ளதாம். இது பிரபல தெலுங்கு சீரியலின் ரீமேக் சீரியலாம். தமிழில் ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாம்.




இதையும் படிங்க: எனது படங்களில் வலிமை தான் மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது – இயக்குநர் எச். வினோத்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ரீமேக் சீரியல்:
விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என டைமிங் முழுவதுமாக நிரம்பி வழிகிறது. அந்த வகையில், தற்போது ரீமேக் சீரியல் ஒன்று ஒளிபரப்பாகவுள்ளதாம். இந்த சீரியலானது நின்ன ஜோதே நன்னா கதே என்ற தெலுங்கு சீரியலின் தமிழ் ரீமேக்காக உருவாகாவுள்ளதாம். இந்த சீரியலை அடேலே பேக்டரி என்ற நிறுவனம் தமிழில் தயாரிக்கவுள்ளதாம். ஆனால் இன்னும் இந்த சீரியலின் நடிகர்கள் யார் யார் என்பது குறித்த எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராமாயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது – நடிகர் யாஷ்
விஜய் டிவி புது தமிழ் ரீமேக் சீரியல் குறித்து இணையத்தில் பரவிவரும் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
விஜய் தொலைகாட்சிக்கு தொடர்ந்து பழைய சீரியல்கள் நிறைவுக்கு வருகிறது. சமீபத்தில் மகாநதி சீரியல் நிறைவடைந்த நிலையில், பெரும் சோகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அதையடுத்து ஒண்ணா இருக்க கத்துக்கணும் மற்றும் காதல் காதல் என்ற புது சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டது. மேலும் தற்போது விஜய் டிவியில் அதிகம் டிஆர்பி ரேட்டிங் கொண்ட சீரியல் என்றால் அது அய்யனார் துணை மற்றும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.