நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா? நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கேள்வி!
Actor Raghava Lawrence Video: தமிழகத்தில் நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்று நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியிட்டு மக்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார். எனது தாய் அனுமதி அளித்துள்ள நிலையில், ரசிகர்களாகி நீங்கள் கருத்து தெரிவியுங்கள் என்று வீடியோவில் பேசியுள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி வந்தது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: தற்போது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவேனா. இல்லையா என்பது தொடர்பான கேள்விகள் எழுந்து வருகிறது. இதில், நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்று கருத்து கூறுங்கள். நீங்கள் வேண்டாம் என்று கூறினால் நான் அரசியலில் நுழைய மாட்டேன். சமூகத்திற்காக எனது தன்னலமற்ற சேவையை தொடர்ந்து செய்வேன். இந்த காணொளியை பார்த்த பிறகு எனது அரசியல் வருகை குறித்து அனைவரும் கருத்து மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும். திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்றால் நான் அரசியலுக்கு வர வேண்டும். எந்த பலனையும் எதிர்பாராமல் பல சேவைகளை செய்ய தயாராக உள்ளேன்.
சீமானால் எனது வாழ்வில் அரசியல் நுழைவு
எந்த பலனையும் எதிர்பாராமல் பல ஆண்டுகளாக சேவை செய்து வருகிறேன். கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, அதில் பங்கேற்றவர்களுக்கு நான் உணவு உள்ளிட்ட உதவிகளை செய்தேன். அப்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என் மீது விமர்சனம் வைத்தார். நானும் பதிலுக்கு விமர்சனம் வைத்தேன். அப்போது முதல் எனது வாழ்வில் அரசியல் நுழைந்தது. இதைத் தொடர்ந்து, ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரிவித்து இருந்தார். அதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பின்னர், கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசியலில் ஈடுபடவில்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்தார்.




மேலும் படிக்க: சிங்கப்பெண்கள் படையின் முதல் வேட்டை.. சென்னையில் புகார் அளித்த 1 மணி நேரத்தில் தரமான சம்பவம்!
வரலாற்று வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம்
இதை தொடர்ந்து, அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கு முன்னதாக அரசியல் ஈடுபட போவதாக எனது தாயிடம் நான் தெரிவித்தேன். அதற்கு, அவர் அரசியல் என்பது ஒரு சாக்கடை. அதில் ஈடுபட வேண்டாம் என்றும், விஜயும் ஈடுபட வேண்டாம் என்றும் என்னிடம் தெரிவித்தார். அதன் பிறகு, சட்டமன்றத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகின. இதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அந்த கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம், வரலாறு மாறியது.
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter… pic.twitter.com/VwPFjdaUqy
— Raghava Lawrence (@offl_Lawrence) June 12, 2026
எனது அரசியல் வருகை குறித்து கருத்து தேவை
இந்த வரலாற்று வெற்றி குறித்து எனது தாயிடம் மீண்டும் தெரிவித்தேன். அப்போது, அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு எனக்கு அனுமதி அளித்தார். தற்போது, தாய் அளித்த அனுமதியை தொடர்ந்து ரசிகர்களாகிய உங்களிடம் நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்று கருத்து கேட்டுள்ளேன். இதற்கு, நீங்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என்று பல்வேறு கருத்துக்களை ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவேன்… ராஜ்யசபா புதிய எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி!