தமிழகத்தின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவேன்… ராஜ்யசபா புதிய எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி!
Rajya Sabha MP Praveen Chakravarty: மாநிலங்களவையில் தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன் என்று தமிழக வெற்றிக் கழத்தின் ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி. ஆக போட்டியின்றி தேர்வான பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறிய கருத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்துக்கான மாநிலங்களவை எம்பி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான வெற்றி சான்றிதழை தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக்கிடம் பிரவீன் சக்கரவர்த்தி பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிராக 3 மசோதாக்களை மக்கள் அவையில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதில், மகளிர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறு வரையறை ( தொகுதி சீரமைப்பு) மசோதா, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
தமிழகத்தின் உரிமைக்காக குரல் எழுப்புவேன்
இந்த மசோதாக்கள் அனைத்தும் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல்கள் ஆகும். இதற்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் குரல் எழுப்ப வேண்டியது மிகவும் அவசியமாகும். தமிழகத்தின் குரல் டெல்லியிலும், நாடாளுமன்றத்திலும் ஒழிக்க வேண்டும். தமிழகத்தின் உரிமைக்காக நான் நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவேன் என்று தெரிவித்தார். அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேலும் படிக்க: பக்தர்களே கவனம்.. திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஆபத்தான மீன்கள்.. கடலோர பாதுகாப்பு குழு எச்சரிக்கை!




தமிழகத்துக்கான ஒரு ராஜ்ய சபா எம்பி பதவி
இதனால், அவர் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஒரு பதவி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் 13 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலினை நடைபெற்ற நிலையில், இன்று வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.
போட்டியின்றி தேர்வான தவெக ஆதரவு எம்பி
இதில், காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனு மட்டுமே தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, விரைவில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவையில் எம்ியாக தடம் பதிக்க உள்ளார். இந்த நிலையில் தான், தமிழகத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே தவெக நிர்வாகி மீதுதானா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!