Sri Sri: பொம்மா பொம்மா.. துல்கர் சல்மானின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
Bomma Bomma Song: நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் தெலுங்கு மொழியில் சிறப்பாக உருவாகிவரும் திரைப்படம்தான் ஸ்ரீ ஸ்ரீ. இப்படமானது காதல் மற்றும் எமோஷனல் கதையில் உருவாக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்திலிருந்து பொம்மா பொம்மா என்ற முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் சிறப்பான நாயகனாக இருந்துவருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து ஹிட் கொடுத்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக காந்தா (Kaantha) என்ற படமானது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் இவர் தெலுங்கில் ஸ்ரீ ஸ்ரீ (Sri Sri) மற்றும் ஆகாஷம்லோ ஓக்க தாரா (Aakasamlo Oka Tara) என்ற படங்களில் நடித்துவந்தார். அதில் இயக்குநர் ரவி நெளகுடிடி (Ravi Nelakuditi) இயக்கத்திழும், ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகிவந்த படம்தான் ஸ்ரீ ஸ்ரீ. இது ஆரம்பத்தில் துல்கர் சல்மானின் DQ41 என அறிவிக்கப்பட்டது.
இந்த படத்திற்கு தேசியவிருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் (GV Prakash) இசையமைக்க, பாடல்கள் தயாராகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான “பொம்மா பொம்மா” (Bomma Bomma) என்ற பாடல் இன்று (27/07/2026) வெளியாகியுள்ளது. நாளை (28/07/2026) துல்கர் சல்மான் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அதை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்ப்பவர்களுக்கு இப்படிதான் இருக்கும் – இயக்குநர் ஓபன் டாக்
துல்கர் சல்மானின் ஸ்ரீ ஸ்ரீ பட பொம்மா பொம்மா பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Pack your bags and come join us on this beautiful ride 🎼❤️#SriSri first single #BommaBomma out now!
▶️https://t.co/nPTPOeCXK7#LoveWillSparkAgain
Starring @dulQuer, @hegdepooja & @Dheekshiths
Directed by @ravinelakuditi9
Music by @gvprakash
Cinematography by #AnayOmGoswamy… pic.twitter.com/EOhkXPyeX0— SLV Cinemas (@SLVCinemasOffl) July 27, 2026
ஸ்ரீ ஸ்ரீ திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த ஸ்ரீ ஸ்ரீ திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். அவருடன் தி கேர்ள்பிரண்ட் பட நடிகர் தீக்ஷிட் ஷெட்டியும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது பள்ளி மற்றும் கல்லூரி பட காதலை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், பீல் குட் படமாக இருக்கும்.
இதையும் படிங்க: அலாக்கா லோவா… தனுஷின் ஓம் திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியானது!
இதன் ஷூட்டிங் நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளது.இப்படத்தை இந்த் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துல்கர் சல்மானின் புது படங்கள்:
நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில், காந்தா படத்திற்கு பின் வெளியாக தயாராகியுள்ள படம்தான் ஐஅம் கேம். மலையாள இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்க, துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பின் இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில், ஆகாசம்லோ ஒக்க தாரா என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படத்திற்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்தான் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.