AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

OM Movie: அலாக்கா லோவா… தனுஷின் ஓம் திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியானது!

OM Movie Fisrt Single Promo: தென்னிந்திய சினிமாவில் சினிமாவில் பன்முக நடிகராக இருந்துவருபவர் தனுஷ். இவர், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் இணைந்துள்ள புது படம்தான் ஓம். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக பணியற்றவரும் நிலையில், இதன் முதல் பாடல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

OM Movie: அலாக்கா லோவா… தனுஷின் ஓம் திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியானது!
அலாக்கா லோவா பாடல் புரோமோ வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 27 Jul 2026 17:21 PM IST

அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் புதிதாக உருவாகிவரும் திரைப்படம்தான் ஓம் (OM). இந்த படத்தில் நடிகர் தனுஷ் (Dhanush) அதிரடி நாயகனாக நடித்துவர, அவருடன் சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து பணியாற்றிவருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2026ம் ஆனது பிப்ரவரி மாதத்தில் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், சிறப்பாக பணிகள் நடைபெற்றுவருகிறது. இதில் நடிகை தனுஷ் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடிக்க, அவருடன் மலையாள ஹீரோ மம்முட்டியும் (Mammooty) சிறப்பான வேடத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது.

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைக்க, ஏற்கனவே டைட்டில் தீம் பாடல் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது ஓம் படத்தின் முதல் பாடல் “அலாக்கா லோவா” (Alaakaa Loova) என்ற பாடல் வெளியாகவுள்ளதாம். அதை முன்னிட்டு தற்போது அதன் புரோமோ வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: 8 ஆண்டுகளைக் கடந்தது விஜய் சேதுபதி ட்ரிபிள் ஆக்‌ஷனில் நடித்த ஜுங்கா படம்

ஓம் திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட புரோமோ வீடியோ குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில், ஓம் பட பின்னணி இசை மற்றும் பாடல்கள் உருவாகியுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடலான அலாக்கா லோவா புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில் தனுஷ் , மிகபெரிய மக்கள் கூட்டத்துடன் நடனமாடுவது போன்ற காட்சிகள் அமைந்துள்ளது. இப்படலானது நாளை (28/07/2026) தனுஷின் 43வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. நாளை மாலை 6:00 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஜெயிலர் 2 படத்துடன் மோதும் ஓம் திரைப்படம்:

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் திரைபடானது செம்மர கடத்தல் மற்றும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது. இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகும் என ஆரம்பத்திலே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படம் வெளியாகும் 1 நாளுக்கு முன், அக்டோபர் 15ம் தேதியில் ரஜினியின் ஜெயிலர் 2 படமானது வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: சூர்யா சாருடன் போட்டியா? ஹாய் பட ரிலீஸ் குறித்து மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு எடவன்!

இந்நிலையில் ஓம் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழு அந்த அறிவிப்பையும் கொடுக்கவில்லை. அதனால் அதன் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என தெரிகிறது. ஓம் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமம் விற்கப்பட்ட நிலையில், அதன் ரிலீஸ் தேதி மாற்றுவது மிகவும் சவாலான விஷயம். அதனால் ஜெயிலர் 2 படத்துடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us