இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
இன்று இரவு 9 மணிக்கு மேல் அவரது உடல் சென்னையிலிருந்து தேனி மாவட்டத்திற்குப் புறப்படும். நாளை (ஜூன் 11) முற்பகல் அவரது உடல், 'காற்றோடு' என்ற கிராமத்தில் அமைந்துள்ள அவரது சொந்தப் பண்ணை வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பாரதிராஜாவின் திடீர் உயிரிழப்பு தமிழ் சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பிரலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
Published on: Jun 10, 2026 02:42 PM
Follow Us
