பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புது படத்தின் கதை இப்படிதான் இருக்கும் – அர்ச்சனா கல்பாத்தி!
Pradeep Ranganathan Next Directorial: தமிழ் சினிமாவில் இளம் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்குநராக நுழைந்து, தற்போது சினிமாவில் நடிகராக படங்களில் நடிக்கிறார். இவர் தனது இயக்கத்திலே, தானே ஹீரோவாக புது படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படத்தின் கதை பற்றி தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் ரவி மோகனின் (Ravi Mohan) நடிப்பில் வெளியான கோமாளி (Comali) என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தனது இயக்கத்தில், தானே ஹீரோவாகவும் அறிமுகமானார். அப்படி அவர் அறிமுகமான முதல் படம்தான் லவ் டுடே. இப்படம் 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் (Dragon) என்ற படத்திலும் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்தது. கடந்த 2025ம் ஆண்டில் டிராகன் மற்றும் டியூட் (Dude) என இரு படங்கள் இவரின் நடிப்பில் வெளியான நிலையில், இப்படங்கள் இரண்டுமே ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது.
இதையடுத்து இறுதியை லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் இவர் நடித்திருந்த நிலையில், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், தற்போது இவர் தனது இயக்கத்தில், மீண்டும் ஒரு புது படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதை ஏஜிஎஸ் என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, அந்த படம் குறித்து விவரமாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஜஸ்ட் காட் திங்க்ஸ்… ஓடிடியில் சூப்பர் ஹிட் அடிக்க வரும் கருப்பு – எங்கு எபோது பார்க்கலாம்
பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய திரைப்படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அர்ச்சனா கல்பாத்தி சொன்ன விஷயம்:
நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்டை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும், இது ஒரு சிறப்பான திரைப்படம். இப்படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். இப்படத்தின் கதையை பிரதீப் ரங்கநாதன் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக எழுதிவருகிறார். இப்படத்தை உருவாக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும். இப்படம் ஒரு பெரிய பிராஜெக்ட் ஆக இருக்கும்” என அதில் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: புது படத்திற்காக நியூ லுக்கில் அருண் விஜய்.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!
பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படம் குறித்து அர்ச்சனா கல்பாத்தி பேசியது தொடர்பான பதிவு:
#PradeepRanganathan has almost finished writing his written and direction next film. There’s action 🔥 in the film, but it’s an all-encompassing film; it’s a separate genre itself. He’s been writing it for 2 years; it’ll take another 6 months to launch. It’s a big project.
-… pic.twitter.com/fVqaMEi9bl— Movies Singapore (@MoviesSingapore) June 8, 2026
பிரதீப் ரங்கநாதன் இயக்குநர் மற்றும் நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தை இவரின் உதவி இயக்குநர் இயக்கவுள்ள நிலையில், பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கிறாராம். இப்படத்தில் மமிதா பைஜூ லீட் நாயகியாக நடிக்க, அஸ்வத் மாரிமுத்து மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.