AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Maaveeran 2: சிவகார்த்திகேயனின் மாவீரன் 2 உருவாகுவது உறுதி.. வைரலாகும் அப்டேட்!

Sivakarthikeyans Maaveeran 2 Confirmed: இயக்குநர் மடோன் அஷ்வின் மற்றும் சிவகார்த்திகேயனின் கூட்டணியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம்தான் மாவீரன். இந்த படத்தின் பாகம் 2 உருவாகவுள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகிவருகிறது.

Maaveeran 2: சிவகார்த்திகேயனின் மாவீரன் 2 உருவாகுவது உறுதி.. வைரலாகும் அப்டேட்!
மாவீரன் 2 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Aug 2026 18:21 PM IST

தென்னிந்திய மொழி சினிமாவில் நாயகனாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழ் மொழியில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் புது திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார். உண்மையான கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இந்த படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின், சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே கிட்டத்தட்ட 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் சிறப்பாக இருந்துவருகிறது.

இந்த படத்திற்கு பின், சிவகார்த்திகேயன் எந்த இயக்குநருடன் இணைகிறார் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், தற்போது அவர் எந்த இயக்குநருடன் மற்றும் எந்த படத்தில் இணைகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் மாவீரன் 2 (Maaveeran 2) படத்தில் இணைவதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: நான் எப்போதும் உன்னையே தேர்ந்தெடுப்பேன்.. காதலனை அறிமுகம் செய்த மிருணாளினி ரவி!

மாவீரன் 2 திரைப்படம் உருவாகுவது உறுதியானது குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

மாவீரன் 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும்:

இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஏற்கனவே நடித்திருந்த திரைப்படம்தான் மாவீரன். இப்படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் மற்றும் மிஷ்கின் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: கார்த்தியின் 30வது படத்தில் இசையமைப்பாளராக இணைந்த தேவி ஸ்ரீ பிரசாத் – வெளியான அறிவிப்பு!

இதற்கு பின் மாவீரன் 2 திரைப்படமானது எப்போது உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மாவீரன் 2 படத்தை சாந்தி டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் (2027) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவீரன் 2 திரைப்படம் உருவாகுவது குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:

மாவீரன் 2 திரைப்படமானது மாவீரன் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்படவுள்ளதாம். ஏற்கனவே இயக்குநர் மடோன் அஷ்வின் இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை தொடங்கிவிட்டாராம். இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் சேயோன் பட ஷூட்டிங்கில் இணைந்த நிலையில், இதை முடித்த பிறகு மாவீரன் 2 படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.

Follow Us