அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா மீது ஏன் விசாரணை இல்லை? – சீமான் காட்டம்..
Naam Tamilar Party Seeman: கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் நிகிதா மீது ஏன் இன்னும் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளவில்லை, விசாரணையை தனிப்படைக்கு மாற்றிய அதிகாரி யார் என்பது தெரிய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கோவில் காவலாளியான அஜித்குமாரின் கொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருபுவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ” அதிமுக ஆட்சியில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் காவல் விசாரணையின் போது உயிரிழந்ததை தொடர்ந்து திமுக எம்பி கனிமொழியும், தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள், ஆனால் அஜித் குமாரின் வீட்டிற்கு ஏன் செல்லவில்லை, ஏனென்றால் இது ஆளும் கட்சி” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் மடப்புரத்தில் நகை திருட்டு வழக்கில் கோவில் காவலாளியான அஜித்குமார் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் மனித உரிமை அமைப்பு என பல தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட வருகிறது.
நாம் தமிழர் கட்சி தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:
அந்த வகையில் அஜித்குமாரின் கொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருபுவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை முன் வைத்தார். அதில் குறிப்பாக, “ ஒருவர் உயிரிழந்த பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது மு க ஸ்டாலின் ஆட்சியில் தான். நம் எல்லோருக்கும் தற்போது தெரிய வேண்டிய ஒரே விஷயம் இந்த விசாரணையை தனிப்படைக்கு அனுப்பியது யார் என்பது தான்.




நிகிதா மீது ஏன் விசாரணை இல்லை – சீமான்:
அடித்து துன்புறுத்தி விசாரிக்கும் அளவுக்கு நெருக்கடி கொடுத்தது யார் ?
பல கேள்விகளுக்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிக்கிதா என்ற அந்த பெண்ணை இதுவரை ஏன் காவல்துறை விசாரிக்கவில்லை ?
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,@Seeman4TN pic.twitter.com/UXdwnQXvK1— NTK IT Wing (@_ITWingNTK) July 9, 2025
அடித்து துன்புறுத்தி விசாரிக்கும் அளவுக்கு நெருக்கடி கொடுத்தது யார் ? பல கேள்விகளுக்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிக்கிதா என்ற அந்த பெண்ணை இதுவரை ஏன் காவல்துறை விசாரிக்கவில்லை ? நேர்மையான அரசாக இருந்தால் குற்றம் நடந்த உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கமோ அல்லது அவர்களுக்கு தகுந்த தண்டனையை வாங்கிக் கொடுத்திருந்தால் நல்ல ஆட்சி.
அதை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து பேரம் பேசும் ஆட்சியை என்ன சொல்ல ? தம்பி அஜித்குமாரின் கொலை வழக்கில் என்ன நடந்தது என்பது இங்கு வெளிப்படையாக இருக்கிறது. அதனால் விசாரணை தேவையில்லை தண்டனை தான் தேவை. ஆனால் சிறப்பு காவல் படையை அனுப்பிய அதிகாரி யார்? அவருக்கு நெருக்கடி கொடுத்த அதிகாரி யார் என்பதைத்தான் விசாரிக்க வேண்டும்” என பேசி உள்ளார்