Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிகரெட் சூடு.. மூளையில் ரத்தக்கசிவு.. அஜித் குமாரின் மருத்துவ ரிப்போர்ட்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

Sivaganga Custodial Death Case : சிவகங்கையில் உயிரிழந்த இளைஞர் அஜித் குமாரின் பிரேத பரிசோதனையின் முழு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், இளைஞர் அஜித் குமாரின் உடலில் சிகரெட்டல் சூடுடி வைத்து சித்திரவதை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், மூளையின் இரண்டு பகுதிகளில் இருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் உடலில் 50 வெளிப்புற காயங்கள் இருப்பது மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

சிகரெட் சூடு.. மூளையில் ரத்தக்கசிவு.. அஜித் குமாரின் மருத்துவ ரிப்போர்ட்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
சிவகங்க இளைஞர் மரணம்
umabarkavi-k
Umabarkavi K | Published: 04 Jul 2025 06:20 AM

சிவகங்கை, ஜூலை 04 : சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தது (Sivaganga Custodial Death) மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.  அஜித் குமார் மரண வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில்,  நாள்தோறும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  அதாவது, தற்போது அஜித் குமாரின் பிரேத பரிசோதனை (Ajith kumar Autopsy Report) அறிக்கை வெளியாகி உள்ளது. 2025 ஜூன் 29ஆம் தேதி அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அஜித் குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது அதற்கான மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், அஜித் குமாரின் உடலில் 50க்கும் மேற்பட்ட வெளிப்புற காயங்களும், பல உள் காயங்களும் இருப்பது தெரியவந்துள்ளது.

அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை

அஜித் குமாரின் வலது கையில் 3 செ.மீ நீளமள்ள பழைய வடுவும், அதோடு, அதில் சிகரெட்டால் சூடு வைத்த அடையாளங்களும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. கைகள், முழங்கால், கால், ஆசனவாய் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் காயங்கள் இருப்பது மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மூளையில் இரண்டு இடங்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டை ஒட்டின் இரண்டு பக்கங்கள் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், வயிற்றுப் பகுதியிலும் ரத்தக் கசிவு இருந்துள்ளதாக தெரிகிறது.

வலது வயிற்றில் லத்தி வைத்து தாக்கப்பட்டதற்காக அடையாளங்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதயம், கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரேத பரிசோதனையின் அறிக்கை மூலம் அஜித் குமார் போலீசாரால் கடும் சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

சிவகங்கை இளைஞர் மரண வழக்கு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித் குமார் (27). இவரை திருட்டு புகார் ஒன்றில் திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  அதன்பிறகு, இளைஞர் அஜித் குமார் உயிரிழந்ததாக கூறினர். இந்த விவகாரம்  மாநிலத்தையே உலுக்கியது. அஜித் குமாரை போலீசார் சித்ரவதை செய்து கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டது.

இது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் அஜித் குமார் போலீசாரால் தாக்கப்பட்ட உயிரிழந்தது உறுதியானது. இதனை அடுத்து 5 போலீசார் மீது கொலை வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர்.

மேலும், 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.  அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கோரி  பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. மேலும், ஆளும் திமுகவை எதிர்க் கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர்.  இப்படியான சூழலில், அஜித் குமாரின் பிரேத பரிசோதனையில் முழு அறிக்கை வெளியாகி  அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.