மெரினா நீச்சல் குளத்துக்கு வராதீங்க..! 20 நாட்கள் மூடப்படும் என அறிவித்த சென்னை மாநகராட்சி.. காரணம் இதுதான்
Chennai Marina Pool Closure: சென்னை மெரினா நீச்சல் குளம் 2025 ஜூலை 11 முதல் 31 வரை 20 நாட்களுக்கு பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. புதிய குழாய்கள் அமைத்தல், ஊறுகுழிகள் பொருத்துதல் மற்றும் சோதனை வெள்ளோட்டம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை ஜூலை 10: சென்னை (Chennai) மெரினா நீச்சல் குளம் (Marina Swimming Pool) ஜூலை 11 முதல் 31 வரை (20 நாட்கள்) இயங்காது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தண்ணீர் சுத்திகரிப்பு மையம் தடையின்றி செயல்பட புதிய குழாய்கள் அமைக்கப்படுகிறது. 135 மீ நீளத்தில் பேக்வாஷ் குழாய் அமைத்தல் நடைபெறும் எனவும் 1.80 மீ விட்டம் கொண்ட 9 ஊறுகுழிகள் பொருத்தப்படும் எனவும் சோதனை வெள்ளோட்டம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் சென்னை மாநகராட்சி (Chennai Corporation) தெரிவித்துள்ளது. பொதுமக்கள் 20 நாட்களுக்கு மெரினா நீச்சல் குளத்துக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் பராமரிப்பு பணிகள்
சென்னை மெரினா பீச்சில் அமைந்துள்ள நீச்சல் குளத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதை சென்னை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. பொதுமக்கள் சுகாதாரமும், பாதுகாப்பும் உறுதி செய்யும் வகையில், நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு மையத்திற்கான குழாய்கள் அமைப்பது, ஊறு குழிகள் மற்றும் பாதுகாப்பு சுவர்களை மேம்படுத்துவது போன்ற பணிகள் நடைபெற உள்ளன. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம், பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 2025 ஜூலை 11 (வெள்ளிக்கிழமை) முதல் 2025 ஜூலை 31-ஆம் தேதி வரை, மொத்தம் 20 நாட்களுக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.




20 நாட்களுக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயங்காது
வணக்கம் #Chennaiites 🙏
வளசரவாக்கம் மண்டலம், எஸ்.வி.எஸ். நகர் குளம் மேம்பாட்டுப் பணி#ChennaiCorporation | #HeretoServe | #PondRestoration | #NammaChennai | #NammaChennaiSingaraChennai | @PriyarajanDMK | @MMageshkumaar | @kgbias pic.twitter.com/NkVlOZiwGM
— Greater Chennai Corporation (@chennaicorp) July 9, 2025
சோதனை வெள்ளோட்டமும் மேற்கொள்ள முடிவு
மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு மையம் தடையின்றி செயல்பட வேண்டும் என்பதற்காக புதிய 135 மீட்டர் நீளமான Backwash குழாய் அமைக்கப்படும். மேலும், 180 மீட்டர் விட்டம் கொண்ட 9 ஊறுகுழிகள் (Soak Pits) பொருத்தப்படவுள்ளன. இதற்கான சோதனை வெள்ளோட்டமும் மேற்கொள்ளப்பட உள்ளது.
மெரினா நீச்சல் குளத்துக்கு வர வேண்டாம்
இந்த பராமரிப்பு பணிகள் தேனாம்பேட்டை மண்டலத்தின் வார்டு-114க்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளதால், மெரினா நீச்சல் குளம் இந்த 20 நாட்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு திட்டமிடுமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
மெரினா நீச்சல் குளம்
சென்னை நகரின் வரலாற்றுச் சிறப்புடன் கூடிய மெரினா கடற்கரை, பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டது. இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக மெரினா நீச்சல் குளம் (Marina Swimming Pool) விளங்குகிறது. இது பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் நீச்சல் பயிற்சியாளர்களுக்கு திறக்கப்பட்ட ஒரு அரசுப் பொதுக்குளமாகும்.
மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த நீச்சல் குளம், பொதுமக்கள் உடற்கல்வி மற்றும் நீச்சல் பயிற்சிக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி நேரங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக கோடை காலங்களில் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறப்புப் பயிற்சிகள் நடத்தப்படும்.