AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வேலூர் திருப்பத்தூரில் கள ஆய்வு.. ஜூன் 25 ஆம் தேதி ரயில் மூலம் காட்பாடி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்..

TN CM MK Stalin Train Journey: வரும் ஜூன் 25 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ரயில் மூலம் காட்பாடிக்கு பயணம் மேற்கொள்கிறார். வேலூர் மற்றும் திருப்பத்தூரில் 2025, ஜூன் 25 மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு கள ஆய்வு மேற்கொள்கிறார்.

வேலூர் திருப்பத்தூரில் கள ஆய்வு.. ஜூன் 25 ஆம் தேதி ரயில் மூலம் காட்பாடி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்..
முதலமைச்சர் ஸ்டாலின்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Jun 2025 15:08 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் ரயில் பயணம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் ஜூன் 25 2025 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக காட்பாடி செல்கிறார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாவட்டம் தோறும் மேற்கொள்ளக்கூடிய பணிகளை கள ஆய்வு செய்வதற்காக பயணம் மேற்கொள்கிறார். அதோடு அந்தந்த மாவட்டங்களில் முடிவடைந்த பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் பணிகளுக்காகவும் அவர் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் பயணம் மேற்கொண்டு வருகிறார். பொதுவாக இந்த கள ஆய்வு பயணத்தின் போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொதுவாக சாலை மார்கமாக தனது சொந்த வாகனத்தில் செல்வது வழக்கம்.

ரயில் மூலம் காட்பாடி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்:

மிகவும் அரிதான நேரங்களில் இது போன்ற ரயில் பயணங்கள் மேற்கொள்வார் அந்த வகையில். இப்போது கள ஆய்வு பணிக்காக வரும் ஜூன் 25 2025 அன்று சென்னையில் இருந்து காட்பாடி வரை ரயில் மூலம் பயணம் மேற்கொள்கிறார். அந்த வகையில் வருகிற ஜூன் 25 மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் மற்றும் திருப்பத்தூரில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கள ஆய்வு செய்ய உள்ளார். அங்கு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காகவும் பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக ஜூன் 25ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக முதலமைச்சர். மு க ஸ்டாலின் காட்பாடிக்கு செல்கிறார். கள ஆய்வை முடித்துவிட்டு ஜூன் 26 ஆம் தேதி திருப்பத்தூரில் இருந்து ரயில் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் சென்னை திரும்புகிறார். இதேபோல் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேலூரில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக ரயில் மூலம் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நலத்திட்ட பணிகள்:

கடந்த சில தினங்களுக்கு முன் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவு குருவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தஞ்சாவூர் பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கே கல்லணையிலிருந்து குருவை சாகுபடிக்காக நீர் திறந்தபின் அங்கு சாலை மார்க்கமாக ரோட் ஷோ மேற்கொண்டார்.

அந்த ரோட் ஷோவில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது அதேபோல் அங்கு கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். இரண்டு நாள் தஞ்சாவூர் பயணத்தில் அவர் முடிவற்ற பணிகளை தொடங்கி வைத்து, பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow Us