விருதுநகர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி கோர விபத்து.. 3 பேர் உயிரிழந்த சோகம்..
Virudhunagar Accident: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இருக்கும் மதுரை தூத்துக்குடி 4 வழி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை 10, 2025) கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி கோர விபத்து நடந்துள்ளது. இதில் ஒட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்,

விருதுநகர், ஜூலை 10, 2025: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் நான்கு வழி சாலையில் கண்டெய்னர் லாரியின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை என்பது மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை செல்லும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதயில் அதிகப்படியான கண்டெய்னர் லாரிகள் செல்வது வழக்கம். அதாவது தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து சரக்குகளை ஏற்றுக்கொண்டு கண்டெய்னர் லாரிகள் மூலம் இந்த நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு இருந்து கப்பல்கள் வழியாக பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து:
அந்த வகையில் மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலையில் கண்டெய்னர் லாரி போக்குவரத்து அதிகம் இருப்பதன் காரணமாக இப்பகுதியில் விபத்துகளும் அவ்வப்போது நடப்பதுண்டு. அந்த வகையில் ஜூலை 10 2025 தேவையான இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற கண்டனர் லாரி மீது வேன் மோதியுள்ளது. இதனால் கடும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதே போல் கண்டெய்னர் லாரியும் கடுமையான சேதம் ஏற்பட்டது.
இதையும் படிக்க: பாமக தலைமைப் பதவிப் போர்: தேர்தல் ஆணையத்தில் முறையீடு..!




3 பேர் உயிரிழந்த சோகம்:
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர், கிளீனர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் உயிரிழந்தவர்களை உடலையும் அங்கிருந்து மீட்டு அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் இரண்டு வாகனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் சில மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்