அதிமுக வென்றால் கூட்டணி ஆட்சியா? ஒரே வார்த்தையில் திட்டவட்டமாக சொன்ன அமித் ஷா
AIADMK BJP Alliance : தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி அமையும் என மத்திய உள்துறை அமித் ஷா மீண்டும் பேசியுள்ளார். கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தலைவர்கள் மறுத்து வரும் நிலையில், மீண்டும் அமித் ஷா திட்டவட்டமாக கூறியிருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை, ஜூலை 12 : தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (AIADMK BJP Alliance) வெற்றி பெற்றால், ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்குமா என்ற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) ஆம் என பதில் கொடுத்துள்ளார். தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா மீண்டும் பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தலுக்கு 9 மாதங்களே உள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துளளது. மேலும், கூட்டணி தொடர்பாக சலசலப்புகள் இருந்து வருகிறது. ஏற்கனவே, அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது. மேலும், தங்கள் கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது. அதே நேரத்தில், கூட்டணிக்குள்ளே சில பிரச்னைகள் எழுந்துள்ளது. அதாவது, தொடக்கத்தில் இருந்தே அமித் ஷா, கூட்டணி ஆட்சி என்று தான் கூறி வருகிறார்.
ஆனால், அதிமுக தலைவர்கள் கூட்டணி ஆட்சி இல்லை என்றே கூறி வருகின்றனர். இதனால், தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களா விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த அமித் ஷா, மீண்டும் அதுபற்றி திட்டவட்டமாக கூறி இருக்கிறார். அதாவது, தி நியூ இந்திய எக்ஸ்பிரஸுக்கு பேட்டி அளித்த அமித் ஷா, கூட்டணி தொடர்பாக முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கூறினார்.
Also Read : பாஜகவின் டம்மி வாய்ஸா எடப்பாடி பழனிசாமி..? முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!




அமித் ஷா பேச்சு
மேலும், தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் பாஜக இடம்பெறுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆம் என ஒரே வார்த்தையில் அமித் ஷா பதிலளித்துள்ளார். தொடர்ந்து, கூட்டணியில் விஜய் இணைவாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இப்போது அதுபற்றி சொல்ல முடியாது. கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வர முயற்சித்து வருகிறோம் என கூறினார்.
தொடர்ந்து, அவரிடம் தமிழகம் எதிர்கொண்டிருக்கும மிகப்பெரிய பிரச்னை என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளித்த அமித் ஷா, “திமுக ஆட்சியில் ஊழல்கள் நடக்கிறது. அந்த பட்டியில், பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வெகு நீளமானது. மதுபான ஊழலில் ரூ.39,775 கோடி, எரிசக்தி ஊழலில் ரூ.4,400 கோடி, எல்காட் ஊழலில் ரூ.3,000 கோடி, ஊட்டச்சத்து ஊழலில் ரூ.450 கோடி, இலவச வேட்டி ஊழலில் ரூ.60 கோடி நடந்துள்ளது.
Also Read : ” 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1500 ரூபாய் தவற விட்டீர்களே” – எடப்பாடி பழனிசாமி பேச்சு..
இவை தவிர வேலைக்கு பணம், 100 நாள் வேலை திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது. ஸ்டாலினுக்கு நான் சொல்ல வேண்டியது இதுதான். தமிழில் மருத்துவம் கற்றுக்கொடுங்கள். ஏன் நீங்கள் கூடாது? தமிழில் பொறியியல் கற்றுக்கொடுங்கள். ஏன் நீங்கள் அதைச் செய்யக்கூடாது?” என கேள்வி எழுப்பினார்.