Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாஜக கூட்டணியில் விசிக? திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!

VCK Leader Thirumavalavan On Alliance : பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருமாவளவனை தங்கள் பக்கம் இழுக்க நடவடிக்கை எடுப்பதாக தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறிய நிலையில், திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் விசிக? திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!
திருமாவளவன்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 16 Jul 2025 19:04 PM

சென்னை, ஜூலை 16 : பாஜக கூட்டணிக்கு (AIADMK BJP Alliance) செல்ல மாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் (Thirumavalavan) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவிற்கு அவர்களது கொள்கை எவ்வளவு முக்கியமோ அதுபோல, எங்கள் கொள்ளை எங்களுக்கு முக்கியம் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதோடு, என்னை கொச்சைப்படுத்தும் நோக்கில் கே.பி.ராமலிங்கம் பேசுவதாகவும், எனது உணர்ச்சியை தூண்டி, திமுக மீது எதிர்ப்பு மனநிலையை உருவாக்க நினைக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், அரசியல் களம் சூடுபபிடித்துள்ளது. குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில்,  அண்மையில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது.  அதிமுக மற்றும் பாஜக தங்கள் கூட்டணி மற்ற கட்சிகளை இணைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

பாஜக கூட்டணியில் விசிக?

இந்த நிலையில்,  திருமாவளவனை திருத்தி எங்கள் கூட்டணிக்கு இழுக்க போகிறேன் என பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்திருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, நாமக்கல் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தங்கமணியை பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் சந்தித்து பேசினார் இதனை அடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”இன்னும் 15 நாட்களில் திருமாவளவனை சந்திக்க போகிறேன். அவரை திருத்த உள்ளேன். அந்த அணியில் இருந்து திருமாவளவனை எங்களுடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்” என கூறினார்.

இந்த நிலையில், சென்னையில் பேட்டி அளித்த திருமாளவன் கே.பி.ராமலிங்கின் கருத்திற்கு பதில் கொடுத்துள்ளார். அவர் பேசுகையில், ” பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டேன். பாஜகவிற்கு அவர்களது கொள்கை எவ்வளவு முக்கியமோ அதுபோல எங்கள் கொள்கை எங்களுக்கு முக்கியம். பாஜக கொள்கைகள் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு நேர் முரணானது.

Also Read : ‘வரும் தேர்தலில் Good Bye தான்’ எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

திருமாவளவன் பரபரப்பு விளக்கம்

இந்துத்துவம் வேறு. அம்பேத்கரியம் வேறு. எங்களுக்கு எங்கள் கொள்கை உயிர்மூச்சு. திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக கொள்கைகளை ஏற்க முடியாது. மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கு நேர் எதிரான கட்சி பாஜக. பாஜகவில் எனக்கு நண்பர்கள் பலர் உள்ளனர். நட்பு வேறு. கொள்கை வேறு” என கூறினார்.

தொடர்ந்து, அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேசிய திருமாவளவன், “அதிமுகவை குறைத்து மதிப்பிட்டு கூட்டணி ஆட்சி என பாஜக கூறி வருகிறது. அதிமுகவை பலவீனமாக கருதும் பாஜகவை அதிமுக தூக்கிப் பிடிக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த இயக்கத்தை அவர்கள் தூச்சமாக மதிக்கிறார்கள்.

Also Read : ’கூட்டணியில் நான் எடுப்பது தான் முடிவு.. அமித் ஷா அப்படி கூறல’ எடப்பாடி பழனிசாமி பேட்டி!

எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமலேயே கூட்டணி ஆட்சி என சொல்கிறார்கள். இதனால், யாருக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. அதிமுகவை பலவீனப்படுத்துகிறது பாஜக. நான் இதை சுட்டிக் காட்டுகிறேன். என் கருத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்க வேண்டாம். அமைதியாக இருக்கலாம். ஆனால், என்னை அவர்கள் விமர்சித்தார்கள் என்றால் அதிமுகவினர் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்கின்றனர்” என்று கூறினார்