Tamil Nadu CM MK Stalin: சமூக விடுதலை நீண்ட பயணம்! இதை நான் மாற்றுவேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
Tamil Nadu CM MK Stalin's Chidambaram Visit: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிதம்பரத்தில் ஐயா இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கத்தைத் திறந்து வைத்தார். இளையபெருமாளின் சமூக நீதிப் பணிகளைப் போற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திராவிட மாடல் அரசின் சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்தினார்.

சிதம்பரம், ஜூலை 15: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) சிதம்பரத்தில் இன்று அதாவது 2025 ஜூலை 7ம் தேதி இளையபெருமாள் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், “சிதம்பரம் மண்டலத்தில் பிறந்து நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்கான உரிமைகளையும், அதற்கான வாசல்களை திறந்துவைத்தவர் ஐயா.இளையபெருமாள் (L. Ilayaperumal). அவருக்கு நம்முடைய எழுச்சித் தமிழர் திருமாவளவன் (Thirumavalavan) முன்னிலையில் நினைவு அரங்கத்தை திறந்து வைத்துள்ளேன். திருமாவளவன் சிதம்பரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, சிதம்பரத்தின் சீர்திருத்த பிள்ளையாக இருந்து வருகிறார். இங்கே வந்துள்ள நமது கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் திராவிட மாடல் அரசின் சமூகசீர்திருத்த திட்டங்களுக்கும் துணையாக இருப்பவர்கள்.
ALSO READ: “உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஊரை ஏமாற்றும் திட்டம்” – இபிஎஸ், தமிழிசை விமர்சனம்




லிஸ்ட் பெருசா இருக்கு, சொல்ல நேரம்தான் இல்லை. நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே திராவிட மாடல் அரசுதான் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு அதிகமான திட்டங்களை தந்து இருக்கிறோம். ஆனால், இந்த திட்டங்கள் மட்டும் போதுமா என்று கேட்டால், போதாது. சுயமரியாதை சமூகத்தை உருவாக்கி நம் எல்லோரும் பயணிக்க வேண்டும். அதையும் திராவிட மாடல் அரசு தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும்.
ஐயா. இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு:
ஐயா எல். இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு !#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/hSIBKuSPeU
— TN DIPR (@TNDIPRNEWS) July 15, 2025
காலணி என்ற சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் என இதுவரை விடுதிகளில் இருந்த பெயரை எடுத்துவிட்டு, சமூக நீதி விடுதிகள் என்று மாற்றியிருக்கிறோம். நம்முடைய செயல்கள் மூலம் இன்றைக்கு, நாளைக்கு எல்லாம் மாறிவிடும் என்று சொல்லவில்லை. சமூக நீதிகளில் பயணிப்பது நீண்ட, நெடிய பயணம், இதற்கு அதிகபடியான காலம் எடுக்கும். ஆனால், எல்லாம் மாறும். நிச்சயம் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மாற்றுவேன். ” என்று தெரிவித்தார்.
ALSO READ: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கம்.. என்னென்ன சேவைக்கு மனு அளிக்கலாம்? முழு விவரம்!
புதிய தொழில் பூங்கா:
தொடர்ந்து கடலூரை அடுத்த குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் தோல் அல்லாத காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்றும், இதனால், 12,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.