Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘வரும் தேர்தலில் Good Bye தான்’ எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

CM Stalin : மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் உங்களுக்கு குட்பை சொல்லுவார்கள் என விமர்சித்திருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

‘வரும் தேர்தலில் Good Bye தான்’  எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 16 Jul 2025 16:51 PM

சென்னை,  ஜூலை 16 : தமிழக மக்கள் இதுவரை டாட்டா பைபை என்று சொன்னார்கள் எனவும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் குட்பை என சொல்லுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) எடப்பாடி பழனிசாமியை (Edappadi Palanisamy) விமர்சித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கி உள்ளார். ரூ.48.17 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களையும், ரூ.113 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களையும்  அவர் தொடங்கி வைத்தார். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, தரங்கம்பாடி ஆடுதுறை இடையேயான சாலை மேம்படுத்தப்படும் என்றும். குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடியில் சீரமைக்கப்படும் என்றும் அறிவித்தார். தொடர்ந்து, சீர்காழி நகராட்சிக்கு ரூ.5 கோடியில் புதிய நகராட்சி அலுவலகம், தரங்கம்பாட்டியில் ரூ.8 கோடியில் மேம்பாட்டுத் திட்டம், நீடூர் ஊராட்சியில் ரூ.45 கோடி செலவில் புதிய ரயில்வே மேம்பாடும் உள்ளிட்ட 8 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

‘வரும் தேர்தலில் Good Bye தான்’

அதைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.  அவர் பேசுகையில், “உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை விமர்சனம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். அதற்காக அவருக்கு எனது நன்றிகள். இந்த திட்டத்தில் என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என்பது குறித்து அவர் விளக்கி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி எனக்கு டாட்டா பைபை என சொல்கிறார்.

Also Read : திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர விசிக துணை நிற்கும்.. விசிக தலைவர் திருமாவளவன் உறுதி..!

10 தோல்வி பழனிசாமி அவர்களே, கடந்த 10 தேர்தல்களில் மக்கள் உங்களுக்கு டாடா பைபை சொன்னார்கள். இந்த தேர்தலிலும் உங்களுக்கு மக்கள் குட்பை சொல்லுவார்கள். திரைப்படத்தில் ஒரு காமெடி வரும். அதற்கு எல்லாம் நீ சரிப்பட்ட வரமாட்டாய். அந்த மாதிரி மக்கள் முடிவுக்கு வந்து விட்டார்கள். மக்கள் உங்களை ஒருபோதும் நம்ப மாட்டார்கள். சுந்தர டிராவல்ஸ் படம் மாறி பஸ் எடுத்து கிளம்பி விட்டார்க்ள. அந்த பேருந்தில் இருந்து புகை வர மாதிரியில், அவர் வாயில் இருந்து அவதூறு வருகிறது” என கூறினார்.

இபிஎஸ் பதிலடி


இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு எடப்பாடி  பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “உங்களுடன் ஸ்டாலின்” ன்னு ப்ரோமோஷன் பண்ணியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள் ,
ஆனால் AMMA -வின் திட்டத்தை copy paste செய்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன், அதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா? பத்து தோல்வி என்று என்னைப் பார்த்து சொல்லும் முன்னர் உங்கள் வரலாற்றைப் பார்த்திருக்க வேண்டாமா?

Also Read : சமூக விடுதலை நீண்ட பயணம்! இதை நான் மாற்றுவேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

Good Bye சொல்லப்போறாங்களாம் மக்கள். மீண்டும் சொல்கிறேன்,
திரு. ஸ்டாலின் அவர்களே.. அது கண்ணாடி. அன்பார்ந்த தமிழக மக்களே- நான் எந்தத் தொகுதிக்கு வந்தாலும், நீங்கள் பெருந்திரளாக வந்து, விண்ணைப் பிளக்கும் அளவிற்கு சத்தமாக சொல்லும் அந்த ஒரு சொல், திரு. ஸ்டாலின் காதுகளுக்கு நன்றாக கேட்கிறது. நீங்கள் சொல்லும் byebyestalin அவரை கதற விடுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.