நாளை தொடங்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. ரயில் மூலம் சிதம்பரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..
Tamil Nadu CM MK Stalin: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, இன்று அதாவது ஜூலை 14 2025 தேதியான இன்று மாலை சென்னை தாம்பரத்திலிருந்து மாலை 6:10 மணிக்கு புறப்படக்கூடிய ராமேஸ்வரம் விரைவு ரயில் மூலம் சிதம்பரம் செல்கிறார்.

சென்னை, ஜூலை 14, 2025: ஜூலை 15 2025 தேதியான நாளை முதல் தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார். ஜூலை 15 2025 அன்று தொடங்கக்கூடிய இந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டமானது மூன்று மாதங்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் மக்களிடமிருந்து பெறக்கூடிய மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று அதாவது ஜூலை 14 2025 தேதியான இன்று சென்னை தாம்பரத்திலிருந்து ரயில் மூலம் சிதம்பரத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்:
அரசு துறைகளில் சேவைகள் திட்டங்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றடையும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த வாரம் அதாவது ஜூலை 7 2025 முதல் தன்னார்வலர்கள் மூலம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 1768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6232 முகாம்களும் என பத்து ஆயிரம் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள்:
தமிழ்நாடெங்கும் 10 ஆயிரம் இடங்களில், உங்கள் ஊரில் உங்களைத் தேடி வரும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள்!
ஜூலை 15 முதல் #UngaludanStalin!@mkstalin | @Udhaystalin | @arivalayam pic.twitter.com/Yd4LYEITc8
— Gingee K.S.Masthan ( செஞ்சி மஸ்தான் ) (@GingeeMasthan) June 17, 2025
இதில் முதல் கட்டமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஜூலை 15 2025 தொடங்கி வைக்கிறார். அதே போல நகர்ப்புறங்களில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகிறது. இதில் முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது மகளிர் உரிமை தொகை காண விண்ணப்பங்கள் இந்த முகாம்களில் மட்டுமே அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முகாம் எங்கு நடைபெறுகிறது இட விவரங்கள் அங்கு என்ன மாதிரியான அரசுத்துறை சேவைகள் வழங்கப்படுகிறது பயனடைவதற்கான தகுதிகள் என்ன, ஆவணங்கள் என்ன, என்பது குறித்து தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று தகவல் தெரிவிப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த திட்டத்தில் சுமார் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபட இருக்கின்றனர். முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலமும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் மூலம் முதல்வர் பயணம்:
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தஞ்சாவூர், வேலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் தற்போது கடலூர் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வை மேற்கொள்ள இருக்கிறார்.
Also Read: 17 மணிநேரத்திற்கு பிறகு! ஒரு வழி தடத்தில் தொடங்கிய ரயில் சேவை.. பயணிகள் மகிழ்ச்சி!
இதற்காக இன்று அதாவது ஜூலை 14 2025 தேதியான இன்று மாலை சென்னை தாம்பரத்திலிருந்து மாலை 6:10 மணிக்கு புறப்படக்கூடிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மூலம் சிதம்பரம் செல்கிறார். அங்கு முதலமைச்சர் வருகையை ஒட்டி திமுக சார்பில் உற்சாக வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டத்தை தொடங்கி வைத்த பின்பு இரண்டு நாட்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து ஜூலை 16 2025 தேதியான புதன்கிழமை அன்று சோழன் விரைவு ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.