Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thirumavalavan: திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர விசிக துணை நிற்கும்.. விசிக தலைவர் திருமாவளவன் உறுதி..!

2026 Tamil Nadu Assembly Elections: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கான திட்டங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கியுள்ளார். விசிகவின் முழுமையான ஆதரவுடன் திராவிட மாதிரி ஆட்சி மீண்டும் அமையும் எனவும், திமுகவின் வெற்றிக்கு விசிக முக்கிய பங்காற்றும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Thirumavalavan: திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர விசிக துணை நிற்கும்.. விசிக தலைவர் திருமாவளவன் உறுதி..!
முதலமைச்சர் ஸ்டாலின் - திருமாவளவன்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Jul 2025 18:31 PM

சிதம்பரம், ஜூலை 15: தமிழ்நாட்டில் தற்போது ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்ற கழகமானது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் (2026 Tamil Nadu Assembly Election) எப்படியாவது வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, திராவிட முன்னேற்ற கழகம் தனது கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (Viduthalai Chiruthaigal Katchi), காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கைகோர்த்துள்ளது. அதேநேரத்தில், அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில், திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர விடுதலை சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும் என்று திருமாவளவன் (Thirumavalavan) தெரிவித்தார்.

திருமாவளவன் உறுதி:

சிதம்பரத்தில் திமுக கூட்டணி குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய இந்த அரசு, மறுபடியும் மலரக்கூடிய ஒரு அணியாக அமையும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும். திமுக கட்சிக்கு விழும் 4 வாக்குகளில் ஒரு வாக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியுடையதாக இருக்கும். 100 வாக்குகளில் 25 வாக்குகள் விசிகவுடையதாக இருக்கும். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வாக்குகள் திமுக தலைமையிலான மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் கொத்துக் கொத்தாக விழும் என்ற அளவிற்கு நாம் அனைவரும் களப்பணி ஆற்றுவோம்.

ALSO READ: சமூக விடுதலை நீண்ட பயணம்! இதை நான் மாற்றுவேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

தளபதி மு.க.ஸ்டாலினுடன் நாங்கள் கைகோர்த்து நிற்கிறோம், களத்தில் நிற்கிறோம் என்பதற்கு இதுதான் முதன்மை காரணம். மக்களின் நலன்களில் அக்கறை காட்டுகின்ற அரசாங்கம், மக்களை வீடு தேடி சந்திக்கின்ற ஒரு அரசாங்கம், அவர்களின் குறைகளை கேட்டு 45 நாட்களுக்குள் தீர்வு காண்போம் என்று உறுதியளிக்கும் அரசாங்கம், தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகளை 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றிய அரசாங்கம். திராவிட முன்னேற்ற கழகம் இப்படி சிறப்பாக விளங்குகிறது. நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச்சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார். கலைஞர் என்றால் பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் நினைவுக்கு வரும், குடிசை மாற்று வாரியம் நினைவுக்கு வரும்.

மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும்:


கலைஞர் எத்தனையோ திட்டங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டாரோ, அவருடைய வழிதோன்றலில் கருத்தியல் வாரிசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறார். தாய் 8 அடி பாய்ந்தால் குழந்தை 16 அடி பாயும் என்று சொல்வார்கள், கலைஞரை விட மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர். மீண்டும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி அமையும், இன்னும் என்னென்ன திட்டங்கள் ஸ்டாலின் மனதில் வைத்திருக்கிறாரோ என்று நமக்கு தெரியாது.

ALSO READ: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கம்.. என்னென்ன சேவைக்கு மனு அளிக்கலாம்? முழு விவரம்!

எல்லாவற்றிலும் நுட்பமான பார்வை, தொலைநோக்கு பார்வை கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் உற்ற துணையாக இருக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் ஓரணியில் தமிழ்நாடு, இதுதான் திமுக அணியின் தமிழ்நாடு” என்று தெரிவித்தார்.