அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திட்டவட்டமாக மறுத்த தவெக.. பின்னணி என்ன?
AIADMK TVK Alliance Talks : பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக் கொள்ள மாட்டோம் என தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்பதற்கும் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

சென்னை, ஜூலை 18 : பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக் கொள்ள மாட்டோம் என தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. விஜய் இறங்கி வந்தால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேள்விக்கு, யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்பதற்கும் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் தான், தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் இதுபோன்று கூறி யிருக்கிறார். தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?
அண்மையில் தான், அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து, கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தை தன்பக்க இழுக்க அதிமுக தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாக தெரிகிறது.




Also Read : என் உயிருக்கு இவர்களால் ஆபத்து.. காவல் ஆணையரிடம் புகாரளித்த ஆதவ் அர்ஜூனா!
இந்த நிலையில், ஆங்கில நாளிதழுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அப்போது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “எங்கள் தேர்தல் யுக்தி மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது” என பதில் அளித்துள்ளார்.
தவெக தலைமை விளக்கம்
கற்பனைகளும் உண்மையும் !
தமிழகத்தின் முதன்மை சக்தியான தவெக தங்களோடு சேர்வதைப் போன்ற தோற்ற மயக்கத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். ஏனென்றால், ஆண்ட கட்சிகளுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் வெற்றித் தலைவரின் எழுச்சியை, கருத்துக்கணிப்புகளில் பார்த்து காய்ச்சல் வந்திருக்கிறது.
தங்கள்…
— Rajmohan (@imrajmohan) July 18, 2025
பாஜகவுடனான கூட்டணியை முறித்து விட்டு, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அதற்கு தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, தவெக கொள்ளை பரபப்பு செயலாளர் ராஜ்மோகன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
Also Read : போராட்டத்தின்போது சாலையின் தடுப்புகள் சேதம் – சரிசெய்ய அனுமதி கேட்டு தவெக கடிதம்!
அதாவது, ”எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக் கொள்ளமாட்டோம். தான் எடுத்த முடிவை ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளும் பழக்கமே அவருக்கு இல்லை. இதுதான் உண்மை வரலாறு. பிளவுவாத சக்திகள் மற்றும் மக்கள் விரோத மன்னராட்சி மனப்பான்மை ஆட்சியாளர்களை, வெற்றித் தலைவர் தலைமையில் வெல்வோம். ஊடகக் கற்பனைகளை புறந்தள்ளி, உண்மை களநிலவரத்தை அறிந்து செயல்படுவோம்” என தெரிவித்துள்ளார்.