Aadhav Arjuna Death Threat: என் உயிருக்கு இவர்களால் ஆபத்து.. காவல் ஆணையரிடம் புகாரளித்த ஆதவ் அர்ஜூனா!
Death Threat Complaint: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது உயிருக்கு திராவிட முன்னேற்ற கழகம் சார்பினர் மிரட்டல் விடுத்ததாகவும், அவரது அலுவலகத்தை திமுக கொடிகள் கட்டிய வாகனங்கள் சுற்றியதாகவும் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான CCTV காட்சிகளையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

சென்னை, ஜூலை 15: திராவிட முன்னேற்ற கழகத்தை (Dravida Munnetra Kazhagam) சேர்ந்தவர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா (Aadhav Arjuna) காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ஆதவ் அர்ஜூனாவின் வழக்கறிஞர் மோகன் பார்த்த சாரதி இதுதொடர்பாக தி.நகர் துணை ஆணையர் குத்தாலிக்கத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கடந்த 2025 ஜூலை 10ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆதவ் அர்ஜூனா அலுவகத்தின் முன்பு, சிலர் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததாக கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது.?
இதுதொடர்பாக ஆதவ் அர்ஜூனா வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவை, அவரது அலுவலம அமைந்திருக்கும் ஆழ்வார்பேட்டை பகுதியில் கடந்த 2025 ஜூலை 10ம் தேதி கார் மற்றும் ஆட்டோவில் சில மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நோட்டமிட்டனர் என்பது தெரியவந்தது.




ALSO READ: மக்களின் நலன்! அமித்ஷாவின் வீட்டின் கதவை தட்டுவது தவறா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி!
இதனால், ஆதவ் அர்ஜூனாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற பயம் எழுந்துள்ளதால், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டி தி.நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று அதாவது 2025 ஜூலை 15ம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆதவ் அர்ஜூனா அளித்த புகார் மனு:
தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா புகார்#TVKVijay #thamizhagathinvetrikural #aadhavarjuna #aadhav #tvk pic.twitter.com/9UaKi8B59C
— தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) (@TVK_NewsTrichy) July 15, 2025
தி.நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் ஆதவ் அர்ஜூனா அளித்த புகார் மனுவில், “ஆழ்வார்பேட்டையில் உள்ள எனது அலுவகத்தில் நான் கடந்த ஜூலை 10ம் தேதி அமர்ந்திருந்தது. அந்தநேரத்தில் எனது அலுவலகத்தை சுற்றி ஆட்டோ மற்றும் கார் நீண்ட நேரம் சுற்றி கொண்டிருந்தது. அதை உற்றுபார்த்தபோது திமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ALSO READ: திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர விசிக துணை நிற்கும்.. விசிக தலைவர் திருமாவளவன் உறுதி..!
அதன்படி, எனக்கும், எனது இல்லம் மர்றும் அலுவலகத்திற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இதனுடன், மேலும் திமுக கொடி கட்டிய வாகனங்கள் சுற்றிய சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளையும் ஆதவ் அர்ஜூனா காவல் ஆணையரிடம் சமர்ப்பித்தார்.