ஆகஸ்ட் 25 ஆம் தேதி த.வெ.கவின் இரண்டாவது மாநாடு.. மதுரையில் நடக்கும் என விஜய் அறிவிப்பு..
TVK State Conference: கடந்த சில நாட்களாக மதுரையில் இரண்டாம் கட்ட மாநாடு நடத்தப்படும் என பேச்சுக்கள் அடிபட்டது. மதுரையில் கூடக்கோவில் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் வருகின்ற 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி மாநில மாநாடு நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க மாநாடு, ஜூலை 16, 2025: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு என்பது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மதுரையில் இருக்கக்கூடிய கூடக்கோயில் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஜூலை 16 2025 தேதியான இன்று அதிகாலை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தக்கல் நடும் விழா நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பிலும் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் இதில இடம் பெற்றுள்ளது.
த.வெ.க-வின் தேர்தல் பணிகள்:
2026 சட்டமன்றத் தேர்தலை தமிழக வெற்றி கழகம் தரப்பில் சந்திப்பதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக செயற்குழு, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், பூத் ஏஜெண்டுகள் அமைப்பது, உறுப்பினர் சேர்க்கை போன்ற விஷயங்களை கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பனையூரில் இருக்கக்கூடிய தமிழக வெற்றிகழகத்தின் தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த முதல் மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.




கவனத்தை ஈர்த்த முதல் மாநாடு:
விக்கிரவாண்டியில் நடந்த கட்சியின் மாநாடு அரசியல் மத்தியில் பெரும் பேசு பொருளாக மாறியது. விஜய் என்ற ஒரு மிகப்பெரிய பிம்பம் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில். அரசியல் வல்லுநர்களும் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதற்கென ஒரு தனி இடம் பிடிக்கும் என தெரிவித்துள்ளனர்.
Also Read: தவெக 2வது மாநில மாநாடு.. தேதி அறிவிப்பு!
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மதுரையில் இரண்டாம் கட்ட மாநாடு நடத்தப்படும் என பேச்சுக்கள் அடிபட்டது. தமிழக வெற்றிகழகத்தின் முதல் மாநாடு மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டது.
மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு:
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.
தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில்…
— TVK Vijay (@TVKVijayHQ) July 16, 2025
இதனைத் தொடர்ந்து மதுரையில் கூடக்கோவில் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் வருகின்ற 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி மாநில மாநாடு நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ” தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றி கழகத்தில் இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன் ” என குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஜூலை 16 2025 தேதியான இன்று அதிகாலை கூடக்கோயில் பகுதியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பூமி பூஜை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட எஸ்பிஐ நாடி இதற்காக அனுமதி கோர உள்ளனர்.