Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜயின் அடுத்த பிளான்.. நாளை மறுநாள் கூடும் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. அறிமுகமாகும் செயலி!

TVK District Secretaries Meeting : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் 2025 ஜூலை 20ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநாடு குறித்தும், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதோடு, உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை விஜய் அறிமுகப்படுத்த உள்ளார்.

விஜயின் அடுத்த பிளான்.. நாளை மறுநாள் கூடும் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. அறிமுகமாகும் செயலி!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 18 Jul 2025 15:34 PM

சென்னை, ஜூலை 18 : தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 2025 ஜூலை 20ஆம் தேதி நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பனையூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் தலைமையில் மாவட்ட செலளார்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 2025 ஆகஸ்ட் மாதம் நடைபெறும் மதுரை மாநில மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும், மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்ட தேர்தல் பணிகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களுக்கு நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. இதில் குறிப்பாக புதிதாக தேர்தல் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறார். மேலும், கூட்டணி பேச்சுக்கே இடமில்லை என கூறி, தனித்து போட்டியிட உள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், மதுரையில நடைபெறும் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மதுரையில் 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

Also Read : ஆகஸ்ட் 25 ஆம் தேதி த.வெ.கவின் இரண்டாவது மாநாடு.. மதுரையில் நடக்கும் என விஜய் அறிவிப்பு..

நாளை மறுநாள் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இந்த நிலையில், 2025 ஜூலை 20ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

அதோடு, மாவட்ட செலயாளர்கள் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்ய உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி அறிமுகப்படுத்த உள்ளார். இந்த செயலி மூலம் ஒவ்வொருவரின் இல்லத்திற்கு சென்று உறுப்பினர் சேர்க்கையில் வாக்குச்சாவடி முகவர்கள் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

Also Read : மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு.. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த பூமி பூஜை..

செயலி அறிமுகம் செய்தவுடன், உறுப்பினர் சேர்க்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இதில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என கட்சி தலைவர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். கட்சயில் ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.