தபால் அலுவலகம் உங்கள் சேமிப்பு கணக்கை முடக்கலாம்! காரணம் என்ன தெரியுமா?
Post Office Rules for Saving Schemes: சிறு சேமிப்புத் திட்டக் கணக்குகளுக்கு தபால் அலுவலகம் புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. கணக்கு வைத்திருப்பவர்களின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தபால் அலுவலகங்கள் (Post Office) மக்களுக்கு மிகச்சிறந்த சேமிப்பு திட்டங்களை வழங்குகின்றன. மற்ற முதலீட்டுத் திடங்களைக் காட்டிலும் எதிர்காலத்துக்கு தேவையான நம்பகமான சேமிப்பு வாய்ப்பாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் விளங்குகின்றன. இந்த நிலையில் உங்கள் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (Savings Scheme) பல ஆண்டுகளாகச் செயல்படவில்லை என்றால், அது மூடப்படலாம். சிறு சேமிப்புத் திட்டக் கணக்குகளுக்கான புதிய விதிகளை தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் பின்பற்றப்படாவிட்டால், கணக்கை மூடலாம். இப்போது கணக்கு வைத்திருப்பவர்கள் பாலிசி நிறைவடையும் 3 ஆண்டுகளுக்குள் அதை மூட வேண்டும். இது செய்யப்படாவிட்டால், தபால் அலுவலகம் அத்தகைய கணக்குகளை முடக்கலாம்.
தபால் நிலைய சேமிப்பு கணக்குகளுக்கு புதிய விதி
இந்தப் புதிய விதிகள் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), கிசான் விகாஸ் பத்திரம் (KVP), தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), தபால் அலுவலக கால வைப்புத்தொகை (TD), தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (RD) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்குப் பொருந்தும்.
இதையும் படிக்க: தொழில் தொடங்க அரிய வாய்ப்பு! – தபால் நிலைய உரிமையைப் பெறலாம் – தகுதிகள் என்ன?




மூன்று வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு மூடப்படாத சிறு சேமிப்புத் திட்டக் கணக்குகளை முடக்குவதற்கான புதிய விதிகளை தாபல் துறை ஜூலை 15, 2025 அன்று வெளியிட்ட உத்தரவில் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் நோக்கம் முதலீட்டாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாகும். புதிய விதிகளின் கீழ், தபால் அலுவலகம் இப்போது செயல்பாட்டில் இல்லாத மற்றும் திட்டம் நிறைவடைந்த சிறு சேமிப்புக் கணக்குகளைக் கண்டறிந்து, வாடிக்கையாளர்களால் முறையாக நீட்டிக்கப்படாவிட்டால், வருடத்திற்கு இரண்டு முறை அவற்றை முடக்கும்.
கணக்குகள் எப்போது முடக்கப்படும்?
மக்கள் தங்கள் சம்பாதித்த பணத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க, கணக்குகளை முடக்கும் செயல்முறை இப்போது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை செய்யப்படும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது. இந்த செயல்முறை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆம் தேதிகளில் தொடங்கி 15 நாட்களுக்குள் முடக்கப்படும். மூன்று ஆண்டுகள் முதிர்வு தேதி நிறைவடைந்த கணக்குகள் முடக்கப்படும்.
இதையும் படிக்க : அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் வட்டியை குறைக்கும் அரசு?.. வெளியான முக்கிய தகவல்!
உதாரணமாக, ஜூன் 30 ஆம் தேதிக்குள் மூன்று ஆண்டுகள் பழமையான கணக்குகளை ஜூலை 1 ஆம் தேதிக்குப் பிறகு 15 நாட்களுக்குள் முடக்கலாம். அதேபோல், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மூன்று ஆண்டுகள் பழமையான கணக்குகளை ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு 15 நாட்களுக்குள் முடக்கலாம். உங்கள் சேமிப்புக் கணக்கு முடக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் உங்கள் கணக்கைத் தொடர, கால நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலாண்டிற்கான அனைத்து சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களையும் மாற்றாமல் வைத்திருப்பதாக அரசு சமீபத்தில் அறிவித்தபோது இந்த புதிய விதி அமலுக்கு வந்தது.