Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பயணிகளே அலர்ட்.. மெட்ரோ ரயிலில் இதை செய்தால் அபராதம்.. கடும் எச்சரிக்கை!

Chennai Metro Rail : சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையங்களில் பயணிகள் புகையிலை பொருட்களை பயன்படுத்தி எச்சில் துப்புவதாக புகார்கள் எழுந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகளே அலர்ட்.. மெட்ரோ ரயிலில் இதை செய்தால் அபராதம்.. கடும் எச்சரிக்கை!
சென்னை மெட்ரோ ரயில்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Jul 2025 14:08 PM

சென்னை, ஜூலை 30 : சென்னை மெட்ரோ ரயிலில் (Chennai Metro Rail) மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் (CMRL) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தூய்மை மற்றும் நடத்தை விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு சட்டப்படி அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பயணிகளுக்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ நிர்வாகம் எடுத்து வருகிறது. அதே நேரத்தில், மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்கள் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்யவும் மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், புதிய அறிவிப்பை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பின்படி, மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும், அதன் விளைவாக எச்சில் துப்புவதாலும், குப்பைகள் போடுவதாலும் அதிகரித்து வரும் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் புகார்களைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தூய்மையையும் சுகாதாரத்தையும் பராமரிக்க பல்வேறு தீவிரப்படுத்தியுள்ளது.

Also Read : பெண்கள், மாணவிகளுக்கு குட் நியூஸ்.. இனி ஈஸியா போகலாம்.. போக்குவரத்து கழகம் எடுத்த முடிவு

மெட்ரோ ரயிலில் இதை செய்தால் அபராதம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நெரிசல் இல்லாத நேரங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் சீரற்ற உடல் சோதனைகளை மேற்கொள்ளும். அதே நேரத்தில் கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் பாதுகாப்பு கண்காணிப்பு அறை விதிமீறல்களை தீவிரமாகக் கண்டறிந்து மெட்ரோ இரயில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read : மதுரையில் பதிவான 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.. மழைக்கு வாய்ப்பு உள்ளதா?

ரயில் நிலையங்களிலும் மெட்ரோ இரயில்களுக்குள்ளும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தூய்மை மற்றும் நடத்தை விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு Metro Railways (Operation and Maintenance) Act, 2002, and Metro Railways Carriage and Ticket Rules, 2014 ஆகியவற்றின் படி அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.