மதுரையில் பதிவான 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.. மழைக்கு வாய்ப்பு உள்ளதா?
Tamil Nadu Weather Update: கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் அதிகபட்சமாக மதுரையில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

வானிலை நிலவரம், ஜூலை 28, 2025: தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்து சில நாட்களாக மழை பதிவு இருந்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் சின்னகல்லாரு, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய பகுதிகளில் தலா நான்கு சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. சோலையார் (கோயம்புத்தூர்) 3, வால்பாறை (கோயம்புத்தூர்), நெய்யூர் (கன்னியாகுமரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), குண்டாறு அணை (தென்காசி), கிளன்மார்கன் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), செருமுள்ளி (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), பார்வூட் (நீலகிரி) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:
அதேபோல் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூலை 28, 2025 தேதியான இன்று மற்றும் ஜூலை 29 2025 தேதியான நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தரைக்காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜூலை 30 2025 முதல் ஆகஸ்ட் 3 2025 வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை மட்டுமே பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மக்களுக்கு இதுதான் பயன்.. விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கக்கூடும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை:
கடந்த வாரம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மாலை முதல் இரவு நேரங்களில் நகரின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் அதிகபட்சமாக மதுரையில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. விமான அவசர கதவு பட்டனை அழுத்திய மாணவன் கைது!
அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், திருத்தணியில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பரங்கிப்பேட்டையில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், கடலூரில் 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 35.2° செல்சியசும் நுங்கம்பாக்கத்தில் 35.1 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது