Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெண்கள், மாணவிகளுக்கு குட் நியூஸ்.. இனி ஈஸியா போகலாம்.. போக்குவரத்து கழகம் எடுத்த முடிவு

Chennai MTC Buses : சென்னையில் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் பிரத்யேகமாக சிறப்பு பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஏற்ப, முக்கிய வழித்தடங்களில் 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

பெண்கள், மாணவிகளுக்கு குட் நியூஸ்.. இனி ஈஸியா போகலாம்.. போக்குவரத்து கழகம் எடுத்த முடிவு
சென்னை மாநகர பேருந்துகள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 29 Jul 2025 21:43 PM

சென்னை, ஜூலை 29 : சென்னையில் அதிக பெண் பயணிகள் பயன்படுத்தும் வழித்தடங்களில் பிரத்யேகமாக பெண்கள் சிறப்பு பேருந்துகள் இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பிரத்யேக பேருந்துகள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது பேருந்து. புறநகர் மற்றும் நகரங்களில் 2,000க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் பயணித்து வருகின்றனர். 27 டிப்போக்களில் இருந்து தினமும் 3,233 பேருந்துகளை இயக்குகிறது. இதில் ஒவ்வொரு நாளும் சுமார் 40 லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர்.

பயணிகள் சிரமமின்றி செல்வதற்காக பல்வேறு பேருந்து சேவையும் தமிழக அரசு தொடங்கி வைத்து வருகிறது. அதன்படி தாழ்தள பேருந்துகள், மின்சார பேருந்துகள், மகளிர் விடியல் பயணம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பேருந்துகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிமாக உள்ளது.

Also Read : வாகன ஓட்டிகளே அலர்ட்.. தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய ரூட் இதுதான்!

பெண்கள், மாணவிகளுக்கு குட் நியூஸ்

இதனால், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பலர் சிரமப்படுகின்றனர். பல இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்துகளும் அதிக அளவில் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருப்பதால், மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதனை தடுக்கும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் 50 பிரத்யேக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்தப் பேருந்துகள் காலையிலும் மாலையிலும் பீக் ஹவரில் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகவும், அங்கிருந்தும் இயக்கப்பட உள்ளது.

Also Read : இனி ரயில் நிலையத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை.. ரூ. 1000 அபராதம் என எச்சரிக்கை..

இதற்கு முக்கிய வழித்தடங்களில் 25 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவற்றில் 4 கல்லூரிகளும் அடங்கும். இவற்றில் பெரும்பாலானவை பெண்கள் மேல்நிலை பள்ளிகள் என தெரியவந்துள்ளது. மேலும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்பவும் முக்கிய வழித்தடங்களில் பிரத்யே பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த திட்டம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை. இதற்கான நடவடிக்கையில் மாநகர போக்குவரத்து கழகம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.