Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மதுரை மக்களே அலர்ட்… முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்.. வெளியான அறிவிப்பு!

Madurai Traffic Diversion : மதுரை மாவட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் காரமணாக, 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கீழவெளிவீதி 144 சந்திப்பிலிருந்து அரசமரம் பிள்ளையார் கோவில் சந்திப்புவரையுள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மக்களே அலர்ட்… முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்.. வெளியான அறிவிப்பு!
மதுரையில் போக்குவரத்து மாற்றம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 02 Aug 2025 08:20 AM

மதுரை, ஆகஸ்ட் 02 : மதுரை மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் (Madurai Traffic Diversion) செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற உள்ளதாகல், இந்த போக்குவரத்து மாற்றம் கொண்டு வரப்பட்டதாக மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் மதுரையும் ஒன்று. மதுரையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ பணிகள், சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மதுரையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவதோடு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடும். அதே நேரத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளும் நடந்து வருகிறது. மழை காலத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குகிறது.

இதனால், முக்கிய இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. அந்த வகையில், கழிவுநீர் பணிகள் நடைபெறுவதால், மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, கீழவெளிவீதி 144 சந்திப்பில் இருந்து அரசமரம் பிள்ளையார் கோயில் சந்திப்பு வரையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால், அந்த சாலையில் தற்காலிகமாக மூடப்படுகிறது. மேலும்,   பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இணையும் பறக்கும் ரயில் திட்டம்.. முதற்கட்ட ஒப்புதல்..

மதுரையில் போக்குவரத்து மாற்றம்

அதன்படி,  கீழவெளிவீதி 144 சந்திப்பிலிருந்து அரசமரம் பிள்ளையார் கோவில் சந்திப்புவரையுள்ள சாலை தற்காலிகமாக மூடப்படுகின்றது. இவ்வழியாக காமராஜர் சாலை செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கீழ்கண்ட மாற்று பயன்படுத்தி செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அண்ணாசிலை சந்திப்பில் இருந்து கீழவெளிவீதி வழியாக கீழவாசல் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் அம்சவள்ளி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி முனிச்சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலைக்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Also Read : பயணிகளே கவனிங்க.. சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. முக்கிய ரூட் இதுதான்!

மஹால் ரோட்டிலிருந்து வாசன் சந்திப்பு வழியாக காமராஜர் சாலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தயிர் மார்க்கெட் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அம்சவள்ளி சந்திப்பு முனிச்சாலை ரோடு வழியாக காமராஜர் சாலைக்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முனிச்சாலை சந்திப்பிலிருந்து கீழவெளிவீதி 144 சந்திப்பிற்கு செல்லக்கூடிய வழித்தடத்தில் வாகனங்கள் வழக்கம் போல் செல்ல எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.