ஆகஸ்ட் 7ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தென்காசி ஆட்சியர் அறிவிப்பு!
Tenkasi Local Holiday : தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி, 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தென்காசி, ஆகஸ்ட் 02 : தென்காசி மாவட்டத்திற்கு 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை (Tenkasi Local Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோயில் சங்கரநயினார் ஆலயத்தின் ஆடித்தபசு திருவிழாவை 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். கோயில் திருவிழா, விஷேச தினங்களில் இதுபோன்று குறிப்பிட்ட மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த மாவட்டத்தை தவிர, மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுகிறது. எனவே, குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் வேறு நாட்கள் வேலை நாளாக இருக்கும். அந்த வகையில் தற்போது தென்காசி மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கநாராயணண சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தக்ரள் வருகை தருவார்கள். இந்த கோயிலில் ஆடி மாதம் ஆடித்தபசு திருவிழா 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா 2025 ஜூலை 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 2025 ஆகஸ்ட் 5ல் நடைபெறுகிறது. தொடர்ந்து, சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறுகிறது.
Also Read : தென் மாவட்ட ரயில்களில் போக்குவரத்து மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஆகஸ்ட் 7ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதனை காண திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால், உள்ளூர் மக்கள் சிரமமின்ற தரிசித்து செல்வதற்காக, மாவட்ட நிர்வாகம் 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய நாள் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய நாளில் நடைபெற்றும் வரும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய நாளில் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறை ஈடுசெய்யும் வகையில், 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : கோவை மக்களே அலர்ட்.. மதுக்கரை சுங்கச்சாவடியில் புதிய கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
முன்னதாக, 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தூய பனிமய மாத ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தங்கதேர் பவனி 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.